மேலும் அறிய
Advertisement
மதுரையில் இருந்து சென்னைக்கு மாலை 5.55 மணிக்கு வந்தே பாரத் ரயில்: ரயில்வே அறிவிப்பு குறித்த விபரம்
வந்தே பாரத் தொடர்பான இந்த ஏற்பாடு மதுரை மற்றும் சுற்று வட்டார பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைகிறது.
பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க ஜனவரி மாதத்தில் வியாழக்கிழமைகளில் சென்னை - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில் (06067) சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 4, 11, 18, 25 ஆகிய வியாழக்கிழமைகளில் காலை 05.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.10 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.
CHENNAI EGMORE - NAGERCOIL- CHENNAI EGMORE VANDE BHARAT SPECIAL SERVICES !
— arunchinna (@arunreporter92) December 27, 2023
To clear the extra rush of passengers during the festival season the following Vande Bharat Special will be operated between Chennai Egmore and Nagercoil.
Further reports to follow -@abpnadu@abplive pic.twitter.com/rEWkh5mc20
மறு மார்க்கத்தில் நாகர்கோவில் சென்னை வந்தே பாரத் சிறப்பு ரயில் (06068) அதே ஜனவரி மாத வியாழக்கிழமைகளில் மதியம் 02.50 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த சிறப்பு ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை செல்லும் சிறப்பு ரயில் மதுரையிலிருந்து மாலை 05.55 மணிக்கு புறப்படுகிறது. மறு மார்க்கத்தில் சென்னையிலிருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் மதுரைக்கு காலை 10.56 மணிக்கு வந்து சேருகிறது. இந்த ஏற்பாடு மதுரை மற்றும் சுற்று வட்டார பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைகிறது.
மேலும் சென்னை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Cyclone Michaung: ”சென்னையில் 80 சதவீதம் மின் விநியோகம் சரி செய்யப்பட்டுள்ளது" - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”மழை நீர் வடிகாலுக்கு 4 கோடி கூட செலவு செய்யவில்லை” - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion