Vaigai Dam: தொடர் மழையால் வைகை அணைக்கு வினாடிக்கு 18,586 கனஅடி நீர் அதிகரிப்பு
71 அடி உயரம் கொண்ட வைகை அணை தற்போது 66 அடியாக உயர்ந்துள்ளது. இதன்காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் முழுவதும் நேற்று மாலை 3 மணி முதல் தற்போது வரையில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக வைகை ஆறு, கொட்டக்குடி ஆறு, சுருளியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகமான மழை பெய்து உள்ளது. இதன்காரணமாக வைகை, கொட்டக்குடி, சுருளியாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக வைகை அணைக்கான நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்து உள்ளது.
இன்று காலை 6 மணிக்கு வினாடிக்கு 4400 கனஅடியாக இருந்த நீர்வரத்து 7 மணிக்கு 19280 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால் வைகை அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களே உஷார்.. கேரளாவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா.. தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?
வைகை அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு, பாசனத்திற்கும் சேர்த்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் அணைக்கான நீர்வரத்து 19 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளதால், வைகை அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தற்போது 66 அடியாக உயர்ந்துள்ளது. இதன்காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Ladakh Earthquake: ஒரு மணி நேரத்தில் 4 முறை நிலநடுக்கம்...ஆட்டம் கண்ட லடாக்! என்ன நடக்குது?
வைகை அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் வைகை அணை ஓரிரு நாட்களில் முழுக்கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வைகை அணைக்கு வரும் நீர்வரத்து குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Time: 12.00NN
Vaigai dam
Level: 66.99
Discharge: 3169
Average Inflow: 18586
Hourly inflow: 24558
Storage: 5086
CREDIT
PERIYAR :2712
VAIGAI :2374
Pc. Patti: 7805
Am. Puram:9560