மேலும் அறிய

கார் பந்தய நிகழ்ச்சி: பாராட்டணும்.. காழ்ப்புணர்ச்சி கூடாது : தங்கதமிழ்ச்செல்வன் பேச்சு

தமிழ்நாட்டின் பெருமையை உலக அளவிற்கு தெரியப்படுத்தும் நிகழ்ச்சி கார் பந்தயம், இந்த நிகழ்ச்சியை நடத்தும் உதயநிதி ஸ்டாலினை பாராட்ட வேண்டுமே தவிர காழ்ப்புணர்ச்சி படக்கூடாது. - தேனி எம்.பி பேட்டி.

ரஜினி பொதுவான கருத்தை சொன்னார், சீனியர்கள் நிறைய இருக்கிற கட்சி திமுக, மிகப்பெரிய பாரம்பரியம் இருக்கு என்ற பொதுவான கருத்தைத்தான் சொன்னார்.

தங்க ப்ரேஸ்லெட் செயின் மற்றும் மோதிரம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வைத்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து தேனி மக்களவை உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் பரப்புரை மேற்கொண்டார். இந்த பரப்புரையின் போது உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் தேர்தலில் வெற்றி பெற உழைத்த மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறனுக்கு உதயசூரியன் சின்னம் பொறித்த 2 பவுன் தங்க கை செயினும்., உசிலம்பட்டி நகர செயலாளர், வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர்கள், சேடபட்டி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர்கள், செல்லம்பட்டி தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர்கள், எழுமலை பேரூர் கழக செயலாளர் என சுமார் 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு தலா 1 பவுன் அளவில் உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட தங்க மோதிரங்களை பரிசாக அணிவித்து நன்றி தெரிவித்தார்.

மேலும் வெற்றிக்கு உழைத்த தி.மு.க நிர்வாகிகள் அனைவருக்கும் கிடா வெட்டி கறிவிருந்து அளித்து நன்றி தெரிவித்தார்.

- மதுரை அரசு மருத்துவமனையில் ஹார்மோன் ஊசிகள் தட்டுப்பாடு - திருநங்கை புகார்

பெருமைப்படுத்தும் விதமாக கார் பந்தயம்

 தேனி மக்களவை உறுப்பினர் தங்கதமிழ்ச் செல்வன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். “தமிழ்நாடு விளையாட்டுதுறையில் சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது. அதை பெருமைப்படுத்தும் விதமாக கார் பந்தயம், உலக அளவில் வீரர்களை வரவழைத்து மிகப்பெரிய கார் பந்தயம் நடைபெறுகிறது. இன்று மக்கள் பார்வைக்கு இலவசமாகவும், நாளை கட்டணமாகவும் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிச்சயமாக இந்த கார் பந்தயம் சிறப்பு மிக்க பந்தயம் என்றே சொல்ல வேண்டும்.

நீதிமன்றம் கூட பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடத்த சொல்லியுள்ளது. உதயநிதி ஸ்டாலினும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தான் இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியையும் நடத்துகிறார். இதில் யாருக்கும் காழ்ப்புணர்ச்சி தேவையில்லை. தமிழ்நாட்டின் பெருமையை உலக அளவிற்கு தெரியப்படுத்தும் நிகழ்ச்சி இந்த கார் பந்தய நிகழ்ச்சி அதை நடத்தும் உதயநிதி ஸ்டாலினை பாராட்ட வேண்டுமே தவிர காழ்ப்புணர்ச்சி படக்கூடாது” என பேசினார்.,

சந்தோஷமான செய்தி

”மேலும் ரஜினிகாந்த் பேசிய சீனியர் ஜூனியர் குறித்த விவகாரம் தொடர்பாக முதல்வரும், ரஜினிகாந்த்தும், துரைமுருகனும் பதில் சொல்லிவிட்டார்கள். அதிமுக ஏன் மீண்டும் மீண்டும் இதை கிளப்பி விடுகிறீர்கள் என புரியவில்லை. எங்களுக்குள் சமரசம் ஆகிவிட்டது. பொதுவான கருத்தை சொன்னார், சீனியர்கள் நிறைய இருக்கிற கட்சி திமுக, மிகப்பெரிய பாரம்பரியம் இருக்கு என்ற பொதுவான கருத்தைத்தான் சொன்னார். சீனியர்களை விலகு என சொல்லவில்லை., சீனியர்கள் அதிகமாக உள்ள கட்சி அதை கொண்டு செலுத்த பெரிய திறமை வேண்டும் அதற்கு முதல்வருக்கு நன்றி சொன்னார். இது சந்தோசமான செய்திதானே” என பேசினார்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Vande Bharat: வருகிறது வந்தே பாரத் ரயில்; இந்த 2 ரயிலும் தென் மாவட்டங்களுக்கு தான் - முழு அப்டேட் இங்கே

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Hidden Camera: பாத்ரூமில் ரகசிய கேமரா.. பெண்களின் ஆபாச வீடியோக்களை விற்ற மாணவர்.. பொறியியல் கல்லூரியில் பரபரப்பு!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
"பக்திமானா இருப்பார் போல" பெட்ரோல் பங்கில் சாமியை கும்பிட்டுவிட்டு ஆட்டைய போட்ட திருடர்!
"அவங்களுக்கு தகுதி இருக்கு" மம்தா தலைமையில் இந்தியா கூட்டணி? பயங்கர வியூகமா இருக்கே!
Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
Embed widget