மேலும் அறிய

Vande Bharat: வருகிறது வந்தே பாரத் ரயில்; இந்த 2 ரயிலும் தென் மாவட்டங்களுக்கு தான் - முழு அப்டேட் இங்கே

நாளை துவக்க நாள் சிறப்பு  ரயில்கள் நிற்கும் ரயில் நிலையங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களுக்கு இரண்டு வந்தே பாரத் ரயில்கள்

சென்னை - நாகர்கோயில் மற்றும் மதுரை - பெங்களூர் இடையே நாளை (ஆகஸ்ட் 31) வந்தே பாரத் ரயில் சேவை துவங்க இருக்கிறது. இந்த இரண்டு ரயில் சேவைகளையும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் துவக்கி  வைக்க இருக்கிறார்.

எழும்பூர் -  நாகர்கோவில்

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் துவக்க நாள் சிறப்பு ரயில் சென்னையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு இரவு 09.30 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி,  ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், சென்னை மேயர் மற்றும் சென்னை மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதன்படி சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் (20627) சென்னை எழும்பூரில் இருந்து புதன்கிழமை தவிர மற்ற வார நாட்களில் அதிகாலை 05.00 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.50 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவில் - சென்னை எழும்பூர்  வந்தே பாரத் ரயில் (20628) நாகர்கோவிலில் இருந்து மதியம் 02.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11.00 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மதுரை - பெங்களூர் (கண்டோன்மென்ட்)

அதேபோல மதுரை - பெங்களூர் கண்டோன்மென்ட் வந்தே பாரத் துவக்க நாள் சிறப்பு ரயில் மதுரையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு இரவு 09.30 மணிக்கு பெங்களூர் சென்று சேரும். மதுரையில் நடைபெறும் விழாவில் மத்திய ரயில்வே துறை மற்றும் ஜல் சக்தி துறை இணை அமைச்சர் வி.சோமன்னா, தமிழக அமைச்சர்  பழனிவேல் தியாகராஜன், பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மேயர் வி.இந்திராணி ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த ரயில்களின் வழக்கமான சேவை செப்டம்பர் 2 முதல் துவங்க இருக்கிறது

செப்டம்பர் 2 வழக்கமாகிறது

மதுரை - பெங்களூர் கன்டோன்மெண்ட் வந்தே பாரத் ரயில் (20671) செப்டம்பர் 2 முதல் மதுரையில் இருந்து செவ்வாய்க்கிழமை தவிர மற்ற வார நாட்களில் அதிகாலை 05.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.00 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் சென்று சேரும். மறு மார்க்கத்தில் பெங்களூரு கண்டோன்மெண்ட் - மதுரை வந்தே பாரத் ரயில் (20672) பெங்களூரு கண்டோன்மெண்டில் இருந்து மதியம் 01.30 மணிக்கு புறப்பட்டு இரவு 09.45 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம்,  கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில்  நின்று செல்லும்.

சிறப்பு வரவேற்பு

இந்த துவக்க நாள் சிறப்பு  ரயில்கள் நிற்கும் ரயில் நிலையங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மக்கள் பிரதிநிதிகள், பயணியர் சங்கத்தினர், மாணவர்கள், முக்கிய பிரமுகர் மற்றும் பொது மக்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். முக்கிய பிரமுகர்கள், சில மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு இந்த துவக்க நாள் சிறப்பு ரயிலில் பயணம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஓசூர் டாடா நிறுவனத்தில் உத்தரகாண்ட் பெண்களுக்கு வேலை; வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு- ராமதாஸ் கண்டனம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நீங்க என்ன மன்னரா? நாக்கை அடக்கி பேசுங்க! முடியுமா முடியாதா? – பிரதானை மிரட்டிவிட்ட முதல்வர் ஸ்டாலின்
நீங்க என்ன மன்னரா? நாக்கை அடக்கி பேசுங்க! முடியுமா முடியாதா? – பிரதானை மிரட்டிவிட்ட முதல்வர் ஸ்டாலின்
மக்களே நாளைக்கு 8 மாவட்டங்களில் பலத்த மழை இருக்கு! ப்ளான் பண்ணிக்கோங்க! எங்கெல்லாம்?
மக்களே நாளைக்கு 8 மாவட்டங்களில் பலத்த மழை இருக்கு! ப்ளான் பண்ணிக்கோங்க! எங்கெல்லாம்?
‘நீங்க நிதியே கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை’ – மாற்றி பேசும் மத்திய அமைச்சர்? - கொந்தளித்த அன்பில் மகேஸ்
‘நீங்க நிதியே கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை’ – மாற்றி பேசும் மத்திய அமைச்சர்? - கொந்தளித்த அன்பில் மகேஸ்
Kanimozhi MP: நீங்க எப்படி அப்படி சொல்லலாம்? – மக்களவையில் சீறிய கனிமொழி -  வார்த்தையை திரும்பப் பெற்ற மத்திய அமைச்சர்
Kanimozhi MP: நீங்க எப்படி அப்படி சொல்லலாம்? – மக்களவையில் சீறிய கனிமொழி -  வார்த்தையை திரும்பப் பெற்ற மத்திய அமைச்சர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

லேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPSTVK Vijay: TVK மா.செ-க்கள் அட்டூழியம் control- ஐ இழந்த விஜய்! கதறி துடிக்கும் தொண்டர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீங்க என்ன மன்னரா? நாக்கை அடக்கி பேசுங்க! முடியுமா முடியாதா? – பிரதானை மிரட்டிவிட்ட முதல்வர் ஸ்டாலின்
நீங்க என்ன மன்னரா? நாக்கை அடக்கி பேசுங்க! முடியுமா முடியாதா? – பிரதானை மிரட்டிவிட்ட முதல்வர் ஸ்டாலின்
மக்களே நாளைக்கு 8 மாவட்டங்களில் பலத்த மழை இருக்கு! ப்ளான் பண்ணிக்கோங்க! எங்கெல்லாம்?
மக்களே நாளைக்கு 8 மாவட்டங்களில் பலத்த மழை இருக்கு! ப்ளான் பண்ணிக்கோங்க! எங்கெல்லாம்?
‘நீங்க நிதியே கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை’ – மாற்றி பேசும் மத்திய அமைச்சர்? - கொந்தளித்த அன்பில் மகேஸ்
‘நீங்க நிதியே கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை’ – மாற்றி பேசும் மத்திய அமைச்சர்? - கொந்தளித்த அன்பில் மகேஸ்
Kanimozhi MP: நீங்க எப்படி அப்படி சொல்லலாம்? – மக்களவையில் சீறிய கனிமொழி -  வார்த்தையை திரும்பப் பெற்ற மத்திய அமைச்சர்
Kanimozhi MP: நீங்க எப்படி அப்படி சொல்லலாம்? – மக்களவையில் சீறிய கனிமொழி -  வார்த்தையை திரும்பப் பெற்ற மத்திய அமைச்சர்
PM SHRI Scheme: கடைசி நேரத்தில் தமிழக அரசு பல்டி; யார் அந்த சூப்பர் முதலமைச்சர்? – மத்திய அமைச்சர் பேச்சால் ரணகளமான மக்களவை!
PM SHRI Scheme: கடைசி நேரத்தில் தமிழக அரசு பல்டி; யார் அந்த சூப்பர் முதலமைச்சர்? – மத்திய அமைச்சர் பேச்சால் ரணகளமான மக்களவை!
Elon Musk Heated Msg: “சின்னப் பையா, சும்மா இரு“.. எலான் மஸ்க் யாரை இப்படி வெளுத்து வாங்கினார் தெரியுமா.?
“சின்னப் பையா, சும்மா இரு“.. எலான் மஸ்க் யாரை இப்படி வெளுத்து வாங்கினார் தெரியுமா.?
TNHB Flats: ரூ.1,168 கோடி வீணா? காலியாக உள்ள 6,900 குடியிருப்புகள் - குடியேற அஞ்சும் பொதுமக்கள், நியாயமா?
TNHB Flats: ரூ.1,168 கோடி வீணா? காலியாக உள்ள 6,900 குடியிருப்புகள் - குடியேற அஞ்சும் பொதுமக்கள், நியாயமா?
North Korea Warns: கடுப்பேத்தாதீங்க.. தப்பா ஒரு குண்டு போட்டாகூட போர் தான்.. வடகொரியா எச்சரிக்கை...
கடுப்பேத்தாதீங்க.. தப்பா ஒரு குண்டு போட்டாகூட போர் தான்.. வடகொரியா எச்சரிக்கை...
Embed widget