மேலும் அறிய

Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!

விவசாயிகள் தெரிவித்துள்ள புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட விதை நெல்லின் மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்து ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். - என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

விதை நெல்லில் வெவ்வேறு ரகங்கள் கலப்பு: அறுவடை செய்ய முடியாமல் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு.

கோடை காலத்தில் சுமார் 800 ஏக்கரில் நெல் சாகுபடி
 
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டாரத்தில் தனியார் கடைகளில் கோடை சாகுபடிக்காக வாங்கப்பட்ட விதை நெல்லில் வெவ்வேறு கால அளவில் விளையும் நெல் ரகங்கள் கலந்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் முதிர்ந்த நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் வயலிலேயே பயிர்கள் சாய்ந்து, மீண்டும் முளைக்கத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருப்புவனம் வட்டாரத்தில் வழக்கமாக கோடை காலத்தில் சுமார் 800 ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெறும். ஆனால், இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கிணற்றுப் பாசன வசதி கொண்ட விவசாயிகள் மட்டுமே சுமார் 100 முதல் 300 ஏக்கர் வரை நெல் பயிரிட்டுள்ளனர்.
 
விதை நெல் வாங்கி பயிரிட்டுள்ளனர்
 
கோடை சாகுபடிக்கு வேளாண்மைத்துறை மூலம் விதை நெல் வழங்கப்படாத நிலையில், விவசாயிகள் தனியார் கடைகளில் விதை நெல் வாங்கி பயிரிட்டுள்ளனர். என்எல்ஆர், கோ-50, கல்சர் பொன்னி உள்ளிட்ட ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. திருப்புவனம் அருகே நெல்முடிகரை குரூப் பகுதியில் மட்டும் சுமார் 100 ஏக்கரில் என்எல்ஆர் ரக நெல் பயிரிடப்பட்டுள்ளது. 120 நாட்களில் அறுவடைக்கு வரும் இந்தப் பயிரை விவசாயிகள் தற்போது அறுவடை செய்யத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், தனியார் கடைகளில் வாங்கிய விதை நெல்லில் 120 நாள் பயிருடன் சுமார் 160 நாட்களில் விளையும் நெல் கலந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் 120 நாள் பயிர்கள் முதிர்ந்து சாய்ந்துள்ள நிலையில், 160 நாள் பயிர்கள் இன்னும் முழுமையாக விளையாததால் ஒரே நேரத்தில் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
பாதிப்பு எப்போது தெரியும்?
 
இயந்திரம் மூலம் அறுவடை செய்யும்போது விளைந்த நெல், விளையாத நெற்கதிர்கள் மற்றும் வைக்கோல் ஆகியவை முறையாகப் பிரியாமல் ஒன்றாகச் சேர்ந்து விடுவதாகவும், இதனால் இயந்திர அறுவடையிலும் பாதிப்பு ஏற்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கூலி ஆட்களை வைத்து அறுவடை செய்ய முயன்றாலும் பயிர்கள் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் இருப்பதால் முழுமையாக அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வயலில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்கள் மீண்டும் முளைக்கத் தொடங்கியுள்ளன. இதுவரை சுமார் 20 ஏக்கர் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மற்ற விவசாயிகளும் அறுவடையைத் தொடங்கும்போதுதான் இதுபோன்ற பாதிப்பு தெரியவரும் என கூறப்படுகிறது.
 
ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
 
விவசாயிகள் தெரிவித்துள்ள புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட விதை நெல்லின் மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்து ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். மேலும், விதை விற்பனை நிலையங்களில் விதைச்சான்று, தரச்சான்று, ரக விவரம், தொகுதி எண் உள்ளிட்ட ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget