Watch Video: "குமரிப்பெண்ணின் உள்ளத்திலே" எம்.ஜி.ஆர். பாடலைப் பாடி அசத்திய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிகழ்ச்சி ஒன்றில் எம்.ஜி.ஆரின் பாடலை பாடி அசத்தியுள்ளார்.
அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஜெயக்குமார். முன்னாள் அமைச்சரான இவர் சிறந்த பாடகர் ஆவார். அ.தி.மு.க.வின் விழா மேடைகளிலும் அ.தி.மு.க. இல்ல நிர்வாகிகள் இல்ல திருமண நிகழ்ச்சியிலும் அவ்வப்போது பாடல்களை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.
பாட்டுப் பாடிய ஜெயக்குமார்:
அதுவும் எந்த மேடைகளாக இருந்தாலும் முன்னாள் முதலமைச்சரான மறைந்த எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா பாடல்களை மட்டுமே பாடுவார். அந்த வகையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எம்.ஜி.ஆரின் பாடல் ஒன்றை பாடி அங்கு வந்த அ.தி.மு.க. நிர்வாகிகளையும், மக்களையும் உற்சாகப்படுத்தினார்.
என்றும்-எங்கும் எதிரொலித்து கொண்டே இருக்கும் புரட்சித்தலைவரின் பொன்னான பாடல்கள்!✌🏻🎶 pic.twitter.com/hOSfmjwdYR
— DJayakumar (@djayakumaroffcl) September 7, 2024
1965ம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் எங்க வீட்டுப்பிள்ளை திரைப்படத்தில் இடம்பெற்ற குமரிப்பெண்ணின் உள்ளத்திலே பாடலை பாடி அசத்தினார். டி.எம்.சௌந்திரராஜன் – பி.சுசீலா ஆகியோர் பாடி எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருப்பார். இந்த படம் எம்.ஜி.ஆரின் ப்ளாக்பஸ்டர் படங்களில் மிகவும் முக்கியமான படம் ஆகும்.
பல மேடைகளில் பாடல்களை பாடி அசத்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று பாடிய பாடல் வீடியோவை வெளியிட்ட என்றும் – எங்கும் எதிரொலித்துக் கொண்டே இருககும் புரட்சித் தலைவரின் பொன்னான பாடல்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.