மேலும் அறிய
Advertisement
உலக அமைதி, கூட்டுக்குடும்பத்தை வலியுறுத்தும் வித்தியாசமான கிறிஸ்துமஸ் குடில்
பாலன் பிறப்பை கொண்டாடும் வகையில் குடில் அமைக்க முடிவு செய்தோம். அதனடிப்படையில் தொட்டிலில் பாலன் பிறப்பை வடிவமைத்தோம்
தூத்துக்குடி உலக அமைதி, கூட்டுக்குடும்பம் போன்ற கருத்துக்களை மையமாக வைத்து தூத்துக்குடியை சேர்ந்த பள்ளி ஓவிய ஆசிரியர் தனது வீட்டில் வித்தியாசமான கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ளார். தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருபவர் நி.இசிதோர் பர்னாந்து (58). இவர் தனது வீட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் வகையில் வித்தியாசமான முறையில் குடில் அமைத்து வருகிறார். குறிப்பாக அதன் பின்னணியில் சமூகச் சிந்தனைகளை தூண்டும் விதவிதமாக ஓவியங்களை வரைத்து வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
மதநல்லிணக்கம், உலக சமாதானம், இலங்கை தமிழர் பிரச்னை, தேசிய ஒருமைப்பாடு, தீவிரவாதம் ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுனாமி பாதிப்பு, பண மதிப்புநீக்க நடவடிக்கை, கரோனா பாதிப்பு என ஏற்கனவே பல கருத்துக்களை மையமாக வைத்து கடந்த 19 ஆண்டுகளாக குடில் அமைத்துள்ளார். குறிப்பாக அப்போதைய சமூக பிரச்சினைகளை மையப்படுத்தி கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது அவரது வழக்கம். அந்த வகையில் 20-வது ஆண்டாக இந்த ஆண்டு ரஷ்யா – உக்ரைன் போரினால் உருவாகியிருக்கும் உலக அமைதியின்மை நீங்கி உலக நாடுகளிடையே மீண்டும் சகோதரத்துவம் மேலோங்கிட வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்தும், 'இரக்க உணர்வுடன் உலகை வழி நடத்துவோம்' என்ற கருத்தை வழியுறுத்தியும் இசிதோர் பர்னாந்து கிறிஸ்துமஸ் குடிலை அமைத்துள்ளார்.
மேலும் கூட்டுக்குடும்பம், முதியோர் மற்றும் பெற்றோரை அரவணைத்தல், வறியோருக்கு உதவி செய்தல், அன்னதானம், கண் தானம், உடல் உறுப்பு தானம் செய்தல் போன்றவற்றை வலியுறுத்தும் ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன. இதனை தவிர அவதார் பட கதாபாத்திரங்களும் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. இந்த கிறிஸ்துமஸ் குடிலை அந்த பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர். அதே போன்று தூத்துக்குடி ரோச் காலனியை சேர்ந்த ஆஷா ரீகாந்த் , தனது வீட்டில் வித்தியாசமான முறையில் இயேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் குடில் அமைத்து உள்ளார். ஒய்யாரமாக அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சல் வடிவிலான மலையாகும் குடிலில் வண்ண வண்ண விளக்குகளுக்கு நடுவே பாலன் பிறப்பை அழகாக வடிமைத்து உள்ளார். இது குறித்து ஆஷா ரீகாந்திடம் கேட்டபோது, “கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் எங்கள் இல்லத்தில் குடில் அமைப்பது வழக்கம், அதே போன்று இந்தாண்டு வித்தியாசமாக பாலன் பிறப்பை கொண்டாடும் வகையில் குடில் அமைக்க முடிவு செய்தோம். அதனடிப்படையில் தொட்டிலில் பாலன் பிறப்பை வடிவமைத்தோம்” என்றார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion