Dindigul: 20 அடி தூரம் பறந்த கார்! பதறவைத்த திண்டுக்கல் விபத்து!
வேடசந்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கல்வார்பட்டி என்னுமிடத்தில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேரும் ஈரோட்டில் நடந்த ஆசிரியர்கள் சங்க மாநாட்டில் கலந்துகிட்டு மீண்டும் ஈரோட்டிலிருந்து திருநெல்வேலி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
'அனைவரையும் வன்கொடுமை செய்வேன்' துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரின் கொடூர முகம்! பகீர் பின்னணி!
விபத்து
காரை சுரேஷ் என்பவர் ஓட்டி வந்தார் . அவருடன் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மோதிலால் ராஜ் மற்றும் ராபர்ட் ஆகிய இரு ஆசிரியர்களும் பயணித்துள்ளனர் . வேடசந்தூர் அருகே கல்வார்பட்டி என்னுமிடத்தில் வந்துகொண்டிருந்தபோது அதிவேகத்தில் வந்ததாலும் தூக்கக்கலக்கத்தில் சுரேஷ் காரை ஓட்டி வந்ததாலும் கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் அதிவேகமாக மோதியது.
#tதிண்டுக்கல் வேடசந்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் 3 பேர் படுகாயம் சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த விபத்து குறித்த நெஞ்சை பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி pic.twitter.com/eOmLrOLwRc
— Nagaraj (@CenalTamil) May 29, 2022
இதில் கார் சுமார் 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே விழுந்தது இந்த விபத்தில் சுரேஷ் சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் அவருடன் பயணித்த மோதிலால் ராஜ் மற்றும் ராபர்ட் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் மூவரையும் அவ்வழியாக பயணித்த சிலர் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு கார் விபத்துக்குள்ளாகும் நெஞ்சை பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Chennai: சென்னை தெருக்களின் சாதிப் பெயர்கள் நீக்கம்.. பணியைத் தொடங்கிய மாநகராட்சி!
மேலும் விபத்துக்குள்ளான மூன்று நபர்களுக்கும் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்