Thirumavalavan : ஆர்எஸ்எஸ் தான் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம்.. பகீரை கிளப்பிய திருமா !
Thirumavalavan : தமிழக ஆளுநர் ரவியை பொருத்தவரை ஆர்எஸ்எஸ் தலைமையிடம் தான் அவருக்கு உச்ச நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் தலைமையிடம் என்ன சொல்கிறதோ அதைத்தான் செயல்படுத்துவார்
தமிழக ஆளுநர் ரவியை பொருத்தவரை ஆர்எஸ்எஸ் தலைமையிடம் தான் அவருக்கு உச்ச நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் தலைமையிடம் என்ன சொல்கிறதோ அதைத்தான் செயல்படுத்துவார். அவருக்கு எந்த மரபுகளும் கிடையாது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் கண்டித்தாலும் அதனை பொருட்படுத்த மாட்டார் திண்டுக்கல்லில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பேட்டி.
திண்டுக்கல்லில் தனியார் பள்ளிகளின் பாதுகாப்பு மாநில மாநாடு இன்று 08.02.25 நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளன் கலந்து கொண்டார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
உச்சநீதிமன்றம் கவர்னருக்கு கண்டனம் தெரிவித்தது குறித்த கேள்விக்கு, ஆளுநர் ரவியை பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ் தலைமையிடம் தான் அவருக்கு உச்ச நீதிமன்றம். ஆர் எஸ் எஸ் தலைமையிடம் என்ன செல்கிறதோ அதைதான் செயல்படுத்துவார். அவருக்கு எந்த மரபுகள் மீதும் நம்பிக்கை கிடையாது. அவருக்கு பொலிட்டிக்கல் எத்திக்ஸ் கிடையாது. அவர் நூறு விழுக்காடு ஆர் எஸ் எஸ் தொண்டர். ஆகவே பாஜக அல்லாது திமுக கட்சி ஆளுகின்ற மாநிலங்களில் இடையூறுகளை ஏற்படுத்துவது, நெருக்கடிகளை ஏற்படுத்துவது என்கின்ற செயல் திட்டத்தின் அடிப்படையில் ஆளுநர் ரவி அவர்கள் செயல்பட்டு வருகிறார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கில் திடீர் திருப்பம்; சிக்கிய விசிக நிர்வாகி... பகீர் கிளப்பும் கனியாமூர் வழக்கு!
எனவே எத்தனை உச்ச நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தாலும் கண்டித்தாலும் அதை அவர் பொறுப்படுத்தமாட்டார். பாஜக வெற்றி மிக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி இந்தியா கூட்டணியில் உள்ளது. காங்கிரசும் ஆம் ஆத்மி பேச்சுவார்த்தையில் நடத்தி தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். தனித்து நின்று வாக்குகளை சிதறடித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியை வலிமைப்படுத்துகிற அனைத்து தார்மீக பொறுப்பு உள்ளது. சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் இந்திய கூட்டணி ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திக்க வேண்டும் அப்போதுதான் பாஜக உடைய தில்லுமுல்லு அரசியலை முறியடிக்க முடியும். வழக்கத்திற்கு மாறாக டெல்லியில் பாஜகவினர் வாக்குகளுக்கு பணம் கொடுத்திருக்கிறார்கள் பொருள் கொடுத்து வெற்றி பெற்றுள்ளனர்.
எப்படியாவது தலைநகர் டெல்லியை கைப்பற்ற வேண்டும் என்பது பாஜகவின் திட்டமாக இருந்தது. அதை அவர்கள் சாதித்து காட்டியுள்ளனர். கெஜ்ரிவாலுக்கு கிடைத்த தோல்வி என்பதைவிட இந்தியா கூட்டணியில் உள்ளவர்களுக்கு கிடைத்துள்ள தோல்வியாகும். திமுக கூட்டணி கட்சிகளுக்கும், திமுகவுக்கும் இடையே முரண்பாடான கருத்துக்கள் இருக்கிறதே என்ற கேள்விக்கு பிரச்சனைகளின் அடிப்படையில் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பது இயல்புதான். அதை கூட்டணிக்கு ஊறு விளைவிக்கக் கூடிய முரண்பாடாக பார்க்க கூடாது. இடதுசாரி கட்சிகளாக இருந்தாலும் சரி விடுதலை சிறுத்தைகள் கட்சியாக இருந்தாலும் சரி என்ன என்பது இந்தக் கூட்டணியின் தேவை என்ன என்பதை உணர்ந்திருக்கின்றோம். தேவை என்பதினால் பிரச்சனைகளின் அடிப்படையில் பேசாமல் இருக்க முடியாது. பிரச்சனைகளின் அடிப்படையில் நாங்கள் அரசுக்கு சிலவற்றை சுட்டிக்காட்டுவோம். அல்லது கண்டிக்கின்றோம் என்றால் அது கூட்டணிக்கு பாதகத்தை உருவாக்காது.
இதையும் படிங்க: TNEB : போர்க்கொடி தூக்கும் மின்சார ஊழியார்கள்.. ஏப்ரல் மாத இறுதியில் கோட்டை முற்றுகை போராட்டம்...
கூட்டணி நிலைப்பாடு என்பது வேறு. பிரச்சனைகளின் அடிப்படையில் அரசு உடன் முரண்பாடு என்பது வேறு. இரண்டையும் முடிச்சு போட வேண்டிய அவசியம் இல்லை. இடதுசாரிகளோ, விடுதலை சிறுத்தைகளோ, திராவிட கட்சிகளின் கூட்டணியில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். தமிழக முதல்வர் பேசுகையில் மத்திய அரசிடம் நீதியும் கிடையாது. நிதியும் கிடையாது என கூறியுள்ளார். இது குறித்து கேட்ட கேள்விக்கு மத்திய பட்ஜெட்டில் தமிழ் நாடு 100 விழுக்காடு புறக்கணிக்கப்பட்டு உள்ளது.
பீகார் ஆந்திர பிரதேஷ் 2 மாநிலம் மட்டும் மையமாக வைத்து கடந்த கடந்த பட்ஜெட்டிலும் இந்த பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதில் கூட்டணிக்கு துணையாக இருக்கக்கூடிய சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமார் ஆகியோரை தக்க வைப்பதில் மத்திய அரசு மிக கவனமாக இருக்கிறது. பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களில் தமிழ்நாடு உள்பட பாஜக அரசு ஓரவஞ்சனையாக செயல்படுகிறது. மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது. திட்டமிட்டு அலட்சியப்படுத்துகிறது புறக்கணிக்கிறது. அதைத்தான் தமிழக முதல்வர் நிதியும் இல்லை நீதியும் இல்லை என்று வரத்துடன் தெரிவித்தார்.





















