மேலும் அறிய

வி.சி.க மாநாட்டில் அதிமுக பங்கேற்பது அவர்கள் விருப்பம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

வி.சி.க மாநாட்டில் அதிமுக பங்கேற்பது என்பது அவர்கள் விருப்பம்  ஆட்சியரகப் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கையில் பேட்டி.

சிவகங்கை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர். வி.சி.க மாநாட்டில் அதிமுக பங்கேற்பது குறித்த கேள்விக்கு அது அவர்களின் விருப்பம் என பேட்டியளித்தார்.
 
அமைச்சர் உதயநிதி 3 நாள் சுற்றுப்பயணம்
 
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 3 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நேற்று முதல் நாள் நிகழ்ச்சியாக மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள தனியார் திடலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று, பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து,  மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்நிலையில் இன்று சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் சுற்று பயனம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை துவக்கிவைத்தார்.
 
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி
 
இதில் முன்னதாக மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை துவங்கி வைத்ததுடன் கைப்பந்து போட்டியை துவக்கி வைத்ததுடன் வீரர்களுக்கு கைகுலுக்கி உற்ச்சாகப்படுத்தினார். இதனை தொடர்ந்து சிவகங்கை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளை வைத்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
 
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு
 
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்...” மதுரையைவிட சிவகங்கையில் அதிகாரிகளின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் அரசு சார்பில் நடைபெற்று வருகிறது. ஒரு சில திட்டஙகள் இன்னும் நிறைவடையாமல் உள்ள நிலையில், திட்டங்களை விரைந்து முடிக்க அறிவுருத்தியுள்ளேன். அதற்கு அதிகாரிகளும் உறுதியளித்துள்ளனர். இந்த ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் இது குறித்த ஆய்வறிக்கையை முதல்வரிடம் வழங்கவுள்ளோம். என, தெரிவித்ததுடன் வி.சி.க மாநாட்டிற்கு அதிமுகவிற்கு அழைப்பு விடுத்துள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அது அவர்களது விருப்பம் என தெரிவித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், ஆட்சியர் ஆஷா அஜித் ஆகியோர் உடனிருந்தனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Breaking News LIVE: திமுகவின் பவள விழா : மாநாட்டு திடலை சுற்றி 5000-க்கும் மேற்பட்ட பதாகைகள்
Breaking News LIVE: திமுகவின் பவள விழா : மாநாட்டு திடலை சுற்றி 5000-க்கும் மேற்பட்ட பதாகைகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?Cuddalore Mayor | Thirumavalavan meets MK Stalin | மிரட்டப்பட்டாரா திருமா? அந்தர் பல்டி பேச்சுகள்Manimegalai Priyanka issue | மணிமேகலை மட்டும் ஒழுங்கா? தலைவலியில் விஜய் டிவி! ரக்‌ஷணின் சோகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Breaking News LIVE: திமுகவின் பவள விழா : மாநாட்டு திடலை சுற்றி 5000-க்கும் மேற்பட்ட பதாகைகள்
Breaking News LIVE: திமுகவின் பவள விழா : மாநாட்டு திடலை சுற்றி 5000-க்கும் மேற்பட்ட பதாகைகள்
Mohan G :
"விஜய் சார் தப்பான வழியில போறாரு.. வருத்தமா இருக்கு.." : விஜய் பற்றி இயக்குநர் மோகன் ஜி
கேரளாவில் குரங்கம்மையா? மீண்டும் க்வாரண்டைனா? அச்சத்தில் பொதுமக்கள்
கேரளாவில் குரங்கம்மையா? மீண்டும் க்வாரண்டைனா? அச்சத்தில் பொதுமக்கள்
புதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Manju Warrier : அழகால் மயக்கும் மஞ்சு வாரியர்...வேட்டையன் கதாபாத்திர அறிமுக வீடியோ
Manju Warrier : அழகால் மயக்கும் மஞ்சு வாரியர்...வேட்டையன் கதாபாத்திர அறிமுக வீடியோ
Embed widget