Manasilaayo Song Review : மலேசியா வாசுதேவன் குரலில் ராப் பாடலா... அனிருத் செய்த இன்னொரு சம்பவம்
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தில் மனசிலாயோ பாடல் வெளியாகியுள்ள நிலையில் இப்பாடல் பற்றி ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்
வேட்டையன்
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். அமிதாப் பச்சன் , மஞ்சு வாரியர் , ஃபகத் ஃபாசில் , ரித்திகா சிங் , துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது . பேட்ட , தர்பார் , ஜெயிலர் ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி வேட்டையன் படம் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் முதல் பாடலான மனசிலாயோ பாடல் வெளியாகியுள்ளது.
மனசிலாயோ
வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் கேரளாவில் நடைபெற்றது. மேலும் தற்போது வெளியாகியுள்ள மனசிலாயோ பாடலும் மலையாள ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. வேட்டையன் படம் கேரளாவை மையப்படுத்திய கதைக்களம் என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. தற்போது மனசிலாயோ பாடலில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை ஏ.ஐ மூலம் உருவாக்கியுள்ளார் ஏ.ஆர் ரஹ்மான்.
சூப்பர் சுப்பு மற்றும் விஷ்ணு எடவன் இருவரும் இணைந்து இந்தப் பாடலை எழுதியுள்ளார்கள். மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் , அனிருத் , தீப்தி சுரேஷ் இணைந்து இப்பாடலை பாடியுள்ளார்கள்.
ரசிகர்களி பல்ஸை அனிருத் எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறார் என்பதற்கு இப்பாடல் ஒரு நல்ல உதாராணம். சமீப காலங்களில் இன்ஸ்டா ரீல்ஸ்களில் மலையாள பாடல்களே அதிகம் வைரலாகின்றன. மேலும் ரஜினியின் மற்றும் மலேசியா வாசுதேவன் காம்போவில் உருவான கிளாசிக் பாடல்களின் டச் இந்தப் பாடலிலும் கொண்டு வர முயற்சித்திருக்கிறார். மனசிலாயோ பாடலைக் கேட்பதற்கு அடுத்த வாரிசு படத்தில் வரும் ஆசை நூறு வகை பாடல் லேசாக ரசிகர்களுக்கு வந்து போகலாம். ஆனால் மலேசியா வாசுதேவன் குரலில் பரபரப்பான ஒரு ராப் பாடலை அனிருத் தனது ஸ்டைலில் கொடுத்திருக்கிறார்.
Hunter dude kanna Vantaar choodu kanna! 🔥 #MANASILAAYO 🥁 from VETTAIYAN 🕶️ is OUT NOW. ▶️ It’s time to vibe for the MALTA blend. 🤩
— Lyca Productions (@LycaProductions) September 9, 2024
▶️ https://t.co/qVl8PxRllm
An @anirudhofficial Musical 🥁
🎤 #MalaysiaVasudevan @singeryugendran @deepthisings
✍🏻 @VishnuEdavan1 @soupersubu… pic.twitter.com/s3SfXObAw0
பாடலை கடந்து இப்பாடலில் நடிகை மஞ்சு வாரியரின் டான்ஸ் மூவ்ஸ் தான் ரசிகர்களை அதிகம் கவரும் என்று எதிர்பார்க்கலாம். தமிழில் மஞ்சு வாரியர் நடித்த அசுரன் , விடுதலை ஆகிய படங்களில் அவர் கொஞ்சம் முதிர்ந்த கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ஆனால் இப்படத்தில் அவர் எனர்ஜி வேற லெவலில் இருக்கிறது.