மேலும் அறிய

கொடைக்கானல் : விளைச்சல் இருந்தும் விலையில்லாத ஏழைகளின் ஆப்பிள் : கடும் நஷ்டத்தின் விவசாயிகள்..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அதிகளவில் விளையும் ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காய் விளைச்சல் இருந்தும் விலையில்லாமல் விவசாயிகள் கடும் நட்டம் அடைந்துள்ளனர்.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்பொழுது பிளம்ஸ் சீசன் முடிவடையும்  நிலையில் ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காய் சீசன் தற்போது தொடங்கியுள்ளது . இந்த பேரிக்காய்கள்  மலைப் பிரதேசங்களில் மட்டும் அதிகமாக விளைவிக்கப்படுகின்றன, கொடைக்கானலில் முக்கிய விவசாயப்பகுதிகளான பள்ளங்கி. வில்பட்டி, பிரகாசபுரம், செண்பகனூர், பெரும்பள்ளம், சின்னபள்ளம் ஆகிய பகுதிகளில் அதிகப்படியாக பேரிக்காய்கள் பல ஏக்கர் பரப்பளவில்  விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு வருடமும் ஜூன்  மாதத்தில் தொடங்கும் பேரிக்காய் சீசன் தற்போது தொடங்கியுள்ள நிலையில் , சென்ற மாதங்களில் பெய்த மழையின் எதிரொலியால் பேரிக்காய்கள்  நல்ல விளைச்சலும் அடைந்துள்ளது. தற்போது கொடைக்கானல் மலை பகுதியில் பேரிக்காய்கள் விளைச்சல் நன்கு உள்ள நிலையில்  அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர். இயற்கையாகவே பல ஏக்கர் பரப்பளவில்  விளைகிறது இந்த பேரிக்காய்கள்  நாட்டு பேரி , ஊட்டி பேரி , வால் பேரி என பல்வேறு வகைகளில்  விளைகின்றன.

கொடைக்கானல் : விளைச்சல் இருந்தும் விலையில்லாத ஏழைகளின் ஆப்பிள் : கடும் நஷ்டத்தின் விவசாயிகள்..!

இங்கு விளைவிக்கப்படும் பேரிக்காய்களை தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடக, மும்பை  உள்ளிட்ட  பகுதிகளுக்கு  அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கொடைக்கானல் பகுதியில் உள்ள சில கிராமங்களில் உள்ள மலைகிராம விவசாயிகள் இது போன்ற சீசனில் மட்டுமே அதிகமாக லாபம் ஈட்டும் பணியில்  ஆர்வம் காட்டுவர். தற்போது உள்ள சூழலில்  தமிழகம்  முழுவதும் கொரோனா தொற்று காரணமாக  பொது முடக்கம் அமுல்படுத்தி உள்ள நிலையில் கொடைக்கானல் பகுதியில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் பேரிக்காய்கள்  கொரோனா வைரஸ் பரவும் அச்சத்தால் மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யமுடியாத நிலையிலும் அப்படி ஏற்றுமதியாகும் பேரிக்காய்கள் குறைந்த அளவே ஏற்றுமதியாகும்  சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல் : விளைச்சல் இருந்தும் விலையில்லாத ஏழைகளின் ஆப்பிள் : கடும் நஷ்டத்தின் விவசாயிகள்..!

பேரிக்காய்க்கு மருத்துவகுணம் இருப்பதால்  சர்க்கரை நோயை  கட்டுப்படுத்துகிறது , இதனால் பொதுமக்கள் அதிக அளவில் விரும்புகின்றனர். மேலும் இந்த வருடம் அதிக அளவில் மழை பெய்ததால் பேரிக்காயின் விளைச்சல் அதிகமாக இருந்துவருகிறது, தற்போது கொரோனா ஊரடங்கு அமுலில் இருப்பதால் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யமுடியாத காரணத்தினால் பழனி, திண்டுக்கல் ,மதுரை உள்ளிட்ட வெளியூர் பகுதிகளுக்கு மட்டும் பேரிக்காய்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.  இந்நிலையில்  கடந்த 2 வருடத்திற்கு முன்பு பேரிக்காய் ஒரு கிலோ 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில்,

கொடைக்கானல் : விளைச்சல் இருந்தும் விலையில்லாத ஏழைகளின் ஆப்பிள் : கடும் நஷ்டத்தின் விவசாயிகள்..!

கடந்த வருடமும், இந்த வருடமும் கொரோனா  ஊரடங்கு அமலில் இருந்து வருவதாலும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யமுடியாத காரணத்தினாலும்  ஒரு கிலோ  40 ரூபாய்க்கும் கீழ் நட்டத்திற்கே பேரிக்காய்கள் விற்பனை  செய்யப்படுவதாக விவசாயிகள் கவலையுடன் கூறுகின்றனர். கொரோனா ஊரடங்கு தளர்வுகளில் போக்குவரத்துத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டுமெனவும் ஏற்றுமதிகள் அதிகரித்தால் மட்டுமே விற்பனை அதிகரிக்கும் நிலையில் உரிய விலை கிடைக்கும் என பேரிக்காய் கொள்முதல் செய்யும் வியாபாரிகளும், விவசாயிகளும் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Embed widget