மேலும் அறிய

தேனி : ஆட்டோவும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

தேனியில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி ஜவகர் நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 36). இவர், தேனி மின்வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டாளராக பணியாற்றி வந்தார். அவருடைய உறவினர் வீட்டு வசந்த விழா பூதிப்புரம் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில்  நடந்தது. இதில் கண்ணன் கலந்து கொண்டார். பின்னர் அங்கு வந்திருந்த கண்ணனின் நண்பரான தேனி பங்களாமேடு பகுதியை சேர்ந்த கணேசன் (45) தனது வீட்டுக்கு ஆட்டோவில் புறப்பட்டார். ஆட்டோவை அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (20) ஓட்டினார். கணேசனை வீட்டில் இறக்கி விடுவதற்காக அந்த ஆட்டோவில் கண்ணன், அவருடைய நண்பர்களான ஜவகர் நகரை சேர்ந்த மணிகண்டன் (35), பழனிச்சாமி (36), நாகராஜ் (21) ஆகியோரும் பயணம் செய்தனர்.

தேனி : ஆட்டோவும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

தேனி   பங்களாமேடு திட்டச்சாலை வழியாக மதுரை சாலையில் சென்ற அவர்கள், அங்கிருந்து பழைய டி.வி.எஸ். சாலைக்கு திரும்ப முயன்றனர். அப்போது மதுரை சாலையில் நேரு சிலை சிக்னல் பகுதியில்    இருந்து வந்த லாரி, ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ அப்பளம் போன்று நொறுங்கியது. ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்ட 6 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு தேனி போலீசாரும் விரைந்து வந்தனர்.

தேனி : ஆட்டோவும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

விபத்தில் காயம் அடைந்த கண்ணன், மணிகண்டன், பழனிச்சாமி, கணேசன், நாகராஜ், ஆட்டோ டிரைவர் சதீஷ்குமார் ஆகியோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மணிகண்டன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியில் அவரும் உயிரிழந்தார். இதனால் விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

Watch video: உசிலம்பட்டி மருமகளான இங்கிலாந்து பெண்.! கடல் கடந்த காதலுக்கு குவியும் வாழ்த்து!!

தேனி : ஆட்டோவும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

இந்த    விபத்து குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியை சேர்ந்த லாரி டிரைவரான கொண்டாரெட்டி (45) என்பவரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த மணிகண்டன் ஆட்டோ டிரைவர் ஆவார்.  தனது  ஆட்டோவை  நிறுத்திவிட்டு நண்பர்களுடன் ஆட்டோவில் வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் ஒரே பகுதியை சேர்ந்த 2 பேர் பலியான சம்பவம் ஜவகர் நகர் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏப்ரல் 1 முதல், ராமேஸ்வரம் - செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை ஜூலை வரை நீட்டிப்பு..

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget