பெரியகுளம் அருகே ஆட்டோ மீது வேன் மோதி விபத்து - சென்னையை சேர்ந்த தம்பதி உயிரிழப்பு
தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே ஆட்டோவில் பிக்கப் வேன் மோதியதில் மூன்று பேர் உயிரிழப்பு. உயிரிழந்தவர்களின் உடல்கள் தேனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு.
தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே ஆட்டோவில் பிக்கப் வேன் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். தேவதானப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
AIADMK Hunger Strike: முன்னாள் முதலமைச்சர் ஈ.பி.எஸ் கைது.. தடையை மீறி போராட்டம்.. போலீஸ் நடவடிக்கை..
தேனி மாவட்டம் தேவானப்பட்டியிலிருந்து கெங்குவார்பட்டி செல்லும் சாலையில் நேற்று நள்ளிரவு கொடைக்கானலில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு மதுரைக்குச் சென்ற பிக்கப் வேணும், கெங்குவார்பட்டி பகுதியிலிருந்து சென்ற ஆட்டோவும் கெங்குவார்பட்டி பிரிவில் விபத்துக்குள்ளானது.
கொங்குவார்பட்டியிலிருந்து சென்ற ஆட்டோ கொங்குவார்பட்டி பிரிவில் திரும்பிய பொழுது கொடைக்கானலில் இருந்து வந்த பிக்கப் வேன் அதிவேகமாக ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த சென்னையைச் சேர்ந்த கணவன் மனைவியான கமலக்கண்ணன், சந்திரிகா ஆகிய இருவரும் படுகாயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் பாரி எஸ்டேட் என்ற கொடைக்கானல் சாலையில் வீடு வாங்கி குடியிருந்து வந்தனர்.
Police Akka : கோவையில் வலம் வரும் "போலீஸ் அக்கா"-க்கள்.... ரோட்சைட் மற்றும் சைபர் ரோமியோக்களுக்கு
மேலும் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர் அருண்குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அருண்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேவதானப்பட்டி காவல் துறையினர் விபத்தில் உயிரிழந்த கணவன் மனைவி கமலக்கண்ணன், சந்திரிகா ஆகியோரைப் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்