(Source: ECI/ABP News/ABP Majha)
தேனி : இதென்ன ஜீப் வண்டியா..! ஸ்கூட்டி பெப்பை பிரித்து ஜீப் மாடலில் தயார் செய்த முதியவர்..
சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரம் கிராமத்தில் வசித்து வரும் ஈஸ்வரன், கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் பிரபலமான நபராக உருவெடுத்துள்ளார் .
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரம் கிராமத்தில் வசித்து வரும் ஈஸ்வரன், கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் பிரபலமான நபராக உருவெடுத்துள்ளார் . மண்வெட்டி களை கொத்து, அரிவாள் உள்ளிட்ட பொருள்கள தானே தனது பட்டறையில் வைத்து தயார் செய்து விற்பனை செய்து வரும் சிறு தொழிலாளியான இவர், தனது சொந்த தேவைக்காகவும் வியாபாரத்திற்காகவும் ஜீப் வடிவிலான வாகனத்தை அவரே தயாரித்தது பலரையும் கவர்ந்தது.
பள்ளிக்கூடமே செல்லாத இவரின் முயற்சி சமூக வலைதளங்களில் பரவி அனைவரையும் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளும் இவருக்கு குவிந்து வருகிறது.ஈஸ்வரன் தன்னோட குடும்பத்து கஷ்டத்தால பள்ளிக்கூடம் பக்கமே போகாத இவரு ஆரம்பத்தில் இருந்தே பட்டறை தொழில் செஞ்சுட்டு வந்துட்டு இருக்காரு. மண்வெட்டி , கொத்து, அரிவாள்உள்ளிட்ட பல பொருட்களை தயார் செஞ்சு விற்பனையும் செய்து வருகிறார். தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றுதான் தன்னுடைய பொருள்களை விற்பனை செஞ்சுட்டு இருந்துருக்காரு. இதனால அதிகமான பொருள்களை வண்டில வச்சுட்டு கொண்டு போகமுடியல சூழல் இருக்கிறப்பதான் இவருக்கு ஒரு புதிய யோசனையை தோனி இருக்கு.சாலையில நிக்கக்கூடிய ஜீப்பு கார் போன்ற வாகனங்களை உன்னிப்பாக பார்த்தும் அதனுடைய வடிவமைப்பு எப்படி இருக்கு அதனுடைய அமைப்பு எப்படி இருக்ககுனு கவனிச்சி இருக்காரு.
அதே மாதிரியே நம்மளாலையும் பண்ண முடியும் யோசனை இவருக்கு வந்து இருக்கு.உடனே தன்னுடைய இருசக்கர வாகனத்தை பிரிச்சி எடுத்து ஜீப் மாரியான வாகனத்தை செய்ய தொடங்கி இருக்காரு. ஆரம்பத்துல இவர் செஞ்ச வாகனம் தாயார் செய்றதுல நிறைய சிக்கல் இருந்தாலும், மனச தளர விடாம அதே இன்ஜினை பயன்படுத்தி ஆட்டோ மாதிரியான வாகனத்தை உருவாக்கி இருக்காரு. அந்த வாகனம் சக்சஸ். தயார் பண்ண உடனே அதை தன்னுடைய சகோதரருக்கு கருவாடு விற்பனை செய்வதற்காக அன்பளிப்பாகவும் கொடுத்திருக்கிறார்.அடுத்து தன்னுடைய தேவைக்காக செகண்ட்ல ஒரு ஸ்கூட்டர் வாங்கி ஸ்கூட்டர் தனித்தனியா பிரிச்சு ஜீப் போன்ற வாகனத்தை இவரை தயாரிக்க தொடங்கி இருக்கிறார். தன்னுடைய குடும்பத்துக்கே தெரியாம பட்டறைல ஜிப் செய்யற வாகனத்தை தொடங்கியிருக்காரு.ஜீப் முழுமையா செஞ்சு முடிச்சதுக்கு அப்புறம் தான் தன்னுடைய குடும்பத்துக்கு சொல்லி இருக்காரு.அவர் மாடிஃபிகேஷன் செய்திருக்கும் வாகனத்தின் மதிப்பு சுமார் 45 ஆயிரம் ரூபாய்னு சொல்றாரு ஈஸ்வரன்.
சுமார் ஒரு மாத காலம் இதற்காக வடிவமைத்து அதை தான் நினைத்தது போல் சிறிய ரக ஜீப்பாக வடிவமைத்து அதற்கு முகப்பு விளக்கு மேலும் ஜீப்பில் உள்ளது போல் கால் ஆக்ஸ்லெட்டர் மேலும் காலில் அழுத்தி நிறுத்தம் செய்யும் பிரேக் பெடல் கேட்பதற்கு ஆடியோ சிஸ்டம் ஒரு சாதாரண ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டரை, குட்டியாக ஒரு ஜீப் மாதிரி வடிவமைத்து அதில் பொருட்களை ஏற்றிச் செல்கிறார். பல லட்சம் செலவு செய்து மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்கும் இளைஞர்களால் கூட இப்படியான வடிவமைப்பைச் செய்துவிட முடியுமா எனத் தெரியவில்லை.ஆனால் பள்ளிக் கூடமே செல்லாத இந்த பெரியவர் தன்னுடைய சொந்த முயற்சியால் சின்ன ஜீப் உருவாக்கியுள்ளதைத் அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்