தேனி : வெகு விமரிசையாக நடைபெறும் கம்பம் கெளமாரியம்மன் கோவில் திருவிழா..
தேனி மாவட்டம், கம்பம் கெளமாரியம்மன் கோவில் உள்ளூர் திருவிழா நேற்று தொடங்கிய நிலையில் அக்னி சட்டி , ஆயிரங்கண்பானை எடுத்தும் பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
எத்தனை நவீன காலங்களும், கால சூழ்நிலைகளும் மாறினாலும் இன்னும் பழமை மாறாமல் இருப்பது நிறைய நிகழ்வுகளிலும் நிகழ்ச்சிகளிலும் நாம் பார்க்க முடியும். அப்படி இருக்கும் நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனித்துவமும் சிறப்பும் இருக்கும்.
அது இடத்திற்கு ஏற்றார்போல் உருவெடுக்கும். எத்தனையோ திருவிழாக்கள், பண்டிகைகள் வந்தாலும் சரி உள்ளூர் கோவில் திருவிழாக்கள் என்றாலே ஒரு கெத்துதான். தப்படிச்சு அது முன்னால ஆடிப்பாடி கோவில் திருவிழாக்கள்ள கொண்டாடுவது கூம்பு வடிவ குழாய் மூலம் பழைய சாமி பாடல்கள போட்டு மஞ்ச தண்ணி ஊத்தி விளையாடும் மஞ்சள் நீராட்டு விழா என இப்படி உள்ளூர் கோவில் திருவிழாக்களுக்கு எப்பவுமே ஒரு தனி கெத்து இருக்குனு சொல்லுவாங்க.
ஒவ்வொரு ஊர்லயும் சித்திரை மாதங்களில் உள்ளூர் கோவில் திருவிழாக்கள் கொண்டாடுவது வழக்கம். அப்படி எத்தனையோ மாவட்டங்கள்ள உள்ளூர் திருவிழாக்கள் கொண்டாடுனாலும், தென் மாவட்டங்கள்ள கொண்டாடப்படும் கோவில் திருவிழாக்கள் பல்வேறு தரப்பினர்களையும் கவனத்தை ஈர்க்கும். அதுல மதுரை அழகர் கோவில் திருவிழா உட்பட பல்வேறு கோவில் திருவிழாக்கள் அடங்கும். அப்படி ஒரு பக்கம் கொண்டாடப்படும் உள்ளூர் திருவிழாவும் ஒன்றுதான் கம்பம் கெளமாரியம்மன் கோவில் திருவிழா.
யார் எந்த ஊர்ல இருந்தாலும் தங்களோட சொந்த ஊர் உள்ளூர் கோவில் திருவிழாவுல எல்லாரும் ஒன்று சேர்ந்து கொண்டாடும் இந்த திருவிழா கடந்த இரண்டு வருசமா நடக்காம இருந்தது. காரணம் உலகை அச்சுறுத்திய கொரோனா எனும் கொடிய நோய். கொரோனாவுலருந்து மீண்டு எல்லா ஊர்கள்ளயும் கோவில் திருவிழாக்கள் , மத வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருது.
அப்படி நடக்கும் உள்ளூர் திருவிழாவுல கெளமாரியம்மன் கோவில் திருவிழாவும் நேற்று தொடங்கி ஒரு வார காலத்துக்கு வெகு விமர்சியா நடக்கும். நேற்று தொடங்கிய இந்த திருவிழா உள்ளூர் மக்கள் தங்களோட நேர்த்திக்கடன் செலுத்த அக்னி சட்டி ஏந்தியும் , தீக்குளி இறங்கியும் , ஆயிரங்கண்பானை , மாவிளக்கு , முளைப்பாரி , போன்ற பல்வேறு விதங்கள்ள தங்களோட நேர்த்திக்கடன்கள செலுத்தி வர்றத பாக்க முடியுது.
கம்பம் கெளமாரியம்மனுக்கு தங்களோட வேண்டுதல் நேர்த்திக்கடன் செலுத்த தங்களோட இறுப்பிடத்துலருந்து அக்னி சட்டி எடுத்து கம்பம் முக்கிய வீதிகள்ள ஊர்வலமா சென்று கோவில் ஸ்தலத்துல தங்களோட வழிபாட முடிச்சுட்டு வர்றது வழக்கம். அப்படி இன்று அதிகாலை முதலே கம்பம் முக்கிய வீதிகளில் எங்கு பார்த்தாலும் கொட்டு சத்தமும் திருவிழா கோலம் பூண்டதயும் பார்க்க முடியுது. வெயிலோட தாக்கம் சுட்டெரிச்சு வந்தாலும் பரவாயில்லை கொட்டு முன்னால ஆடிப்பாடி செல்லும் சிறுவர்கள் , இளைஞர்கள்னு இந்த வருடம் உள்ளூர் கோவில் திருவிழா வெகு விமரிசையா நடந்து வருது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்