Sri Lanka Crisis LIVE: இலங்கையில் இன்று அதிபர் கோட்டாபய அரசுக்கு எதிராக தீர்மானமா..?
Srilanka Protests LIVE Updates: இலங்கையில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் மக்களின் போராட்டம் குறித்த செய்திகளை உடனுக்குடன் கீழே தெரிந்து கொள்ளலாம்
LIVE
Background
இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்தது. மேலும், மின்சாரம் தினமும் பல மணி நேரம் துண்டிக்கப்பட்டது. இதனால், கடுமையாக அவதிக்குள்ளாகியுள்ள மக்கள் அந்த நாட்டு அரசுக்கு எதிராக கடுமையாக போராடி வருகின்றனர். கடந்த சில வாரங்களாக சாலைகளில் இறங்கி போராடி வந்த பொதுமக்களுக்கும், ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது.
இலங்கை அரசின் ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளால் கடும் கோபத்திற்கு ஆளாகிய பொதுமக்கள் நாடு முழுவதும் உள்ள ஆளுங்கட்சி தலைவர்களின் வீடுகளில் தாக்குதலை நடத்தினர். மக்களின் போராட்டத்திற்கு அடிபணிந்த மஹிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், மக்கள் ராஜபக்சேவின் வீட்டை தீ வைத்து கொளுத்தினர். ஆளுங்கட்சியின் எம்.பி. ஒருவர் தன்னைத் தானே சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், அந்த நாட்டில் மக்களை கட்டுப்படுத்துவதற்காக ராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அடுத்த இரண்டு மாதங்கள் கடினமாக இருக்கும்
இலங்கையில் அடுத்த இரண்டு மாதங்கள் கடினமாக இருக்கும் என்று அந்த நாட்டின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
ரணில் விக்கிரமசிங்கே அரசுக்கு சஜீத் பிரேமதாசா ஆதரவு
ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசுக்கு சஜீத் பிரேமதாசா திடீரென ஆதரவு அளித்துள்ளார்.
இலங்கையின் அமைச்சராக 4 பேர் புதியதாக பதவியேற்பு
இலங்கையில் புதிய அமைச்சராக 4 பேரை நியமித்து அந்த நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்துள்ளார். அரச சேவைகள் அமைச்சராக தினேஷ் குணவர்தனா, வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக ஜீ.எல்.பீரிஸ், வலுசக்தி அமைச்சராக காஞ்சன விஜேசேகரா, நகர அபிவிருத்தி அமைச்சராக பிரசன்ன ரணதுங்கா ஆகியோர் கோத்தபய ராஜபக்சே பதவியேற்றுள்ளார்.
மகிந்த ராஜபக்சே கைது செய்யப்படுவாரா..?
கொழும்பில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக மகிந்த ராஜபக்சே மீது புகார். இதையடுத்து விரைவில் மகிந்த ராஜபக்சே உட்பட 7 பேர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
Sri Lanka News LIVE: ரணில் விக்கிரமசிங்கே நியமனம் : இலங்கையில் டாலரின் மதிப்பு சரிவு
இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கே நியமனத்தைத் தொடர்ந்து அந்த நாட்டில் உள்ள வங்கிகளில் ரூபாயிற்கு எதிரான டாலரின் மதிப்பு குறைந்துள்ளது.