பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூல்? - தேனியில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்
பள்ளி கட்டணம் என்ற பெயரில் மாணவர்களின் பெற்றோர்களிடம் அதிக அளவில் பணம் வசூல் செய்வதாகவும், அந்தப் பணத்திற்கான ரசீது கேட்டால் தர மறுப்பதாகவும் புகார்.
பள்ளி கட்டணம் என்ற பெயரில் அரசு பள்ளிகளில் நடைபெறும் முறையீடுகளை கண்டித்தும், கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து இறந்ததற்கு தமிழக அரசு காரணம் எனவும், அரசு மருத்துவமனையில் நோயாளிகளை அலட்சியமாகவும் தகாத வார்த்தைகளால், ஒருமையில் பேசும் மருத்துவர், செவிலியர்களை கண்டித்தும், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை திருவள்ளுவர் சிலை அருகில் பெரியகுளம் நகர செயலாளர் முத்தையா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியகுளத்தில் உள்ள அரசு விக்டோரியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் பள்ளி கட்டணம் என்ற பெயரில் மாணவர்களின் பெற்றோர்களிடம் அதிக அளவில் பணம் வசூல் செய்வதாகவும், அந்தப் பணத்திற்கான ரசீது கேட்டால் தர மறுப்பதாகவும், இதேபோன்று அரசு பள்ளிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், இதனை பள்ளி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுத்து, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் பலியானதற்கு காரணமான தமிழக அரசை கண்டித்தும், அதேபோன்று பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளிடம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தகாத வார்த்தைகளால் பொறுமையில் பேசியும், அலட்சியம் காட்டுவதாகவும், இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியகுளம் நகர்மன்ற உறுப்பினர் குமரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் பிரியா முருகேஸ்வரி, மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஏராளமான கலந்து கொண்டனர்.