மேலும் அறிய

Theni: பக்தர்களே... காசிக்கு நிகரான பெரியகோவில்...! பெரியகுளம் முருகன் கோவிலுக்கு ஏன் இத்தனை சிறப்பு..?

தேனி மாவட்டத்தில் பெரியகோவில் என அழைக்கப்படும் வரலாற்றுமிக்க, புகழ்பெற்ற பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் பெரியகோவில் என பெயர் பெற்றது பாலசுப்பிரமணியர் திருக்கோவில். இங்கு மூலவர் லிங்க சொரூபமாக இராஜேந்திர சோழீஸ்வரர் இருந்தாலும் முருகன்தான் பிரசித்தி. இங்குள்ள முருகன் ஆறு முகங்களுடன் வள்ளி தெய்வானையுடன், மயில் வாகனத்தில் காட்சி தருகிறார். எனவே இக்கோயிலை பாலசுப்பிரமணியர் கோயில் என்று தான் இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.

முருகன் திருக்கோவில்:

கோவிலில் சித்திரைத்திருவிழா, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், தைப்பூசம், கந்த சஷ்டி திருக்கார்த்திகைவின் முக்கிய விழாவான சூரசம்ஹாரம், திருக்கல்யாணம்,  பங்குனி பிரமோற்சவம் விழாவில் தேரோட்டம், பிரதோஷ வழிபாடு, போன்ற  நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.

Theni: பக்தர்களே... காசிக்கு நிகரான பெரியகோவில்...! பெரியகுளம் முருகன் கோவிலுக்கு ஏன் இத்தனை சிறப்பு..?

பல நூற்றாண்டுகளுக்கு  முன்பு பெரியகுளம் உள்ளிட்ட பகுதியை கொண்ட நாட்டை இராஜேந்திரசோழன் ஆட்சி செய்து வந்த காலத்தில் ஓர் நாள் வராக நதிக்கரையில் உள்ள அகமலைக்கு வேட்டைக்குச் சென்றான். அப்போது, அங்கு ஒரு பன்றி தனது குட்டிகளுக்கு பால் புகட்டிக் கொண்டிருந்தது. மன்னன் அம்பினால் தாய்ப்பன்றியை வீழ்த்தினான். தாயின் நிலைகண்டு கதறிய குட்டிகள் முன்பு தோன்றிய முருகக்கடவுள், அவற்றிற்கு பால் புகட்டி பசியைப் போக்கி அருளினார். தாயைக்  கொன்று குட்டிகளைப் பசியால் துடிக்கவைத்த பாவத்தைப் போக்கவும், பன்றிகளுக்கும் அருளிய முருகனின் பெருமையை உணர்த்தவும் ராஜேந்திர சோழன் அவருக்காக இக்கோயிலைக் கட்டினான் என்று வரலாறு  கூறுகிறது.

Theni: பக்தர்களே... காசிக்கு நிகரான பெரியகோவில்...! பெரியகுளம் முருகன் கோவிலுக்கு ஏன் இத்தனை சிறப்பு..?

சிவன் கோயில்:

பாலசுப்பிரமணியர் கோவில் என்றவுடன் இது முருகன் கோவில் என்று அர்த்தமில்லை. இது ஒரு சிவன் கோவில் ராஜேந்திர சோழன் கட்டிய கோவில் என்பதால் ராஜேந்திர சோழீஸ்வரர் என இங்குள்ள சிவபெருமான் புகழ்பெறுகிறார். தாயார் அறம் வளர்த்த நாயகி என்று புகழ்பெறுகிறார்.  ஒரே கோயிலில் தனித்தனியாக ஒவ்வொரு கொடிமரங்களுடன்  சிவன், அம்பாள், முருகன் வள்ளி தெய்வானையுடனும் தனி தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். சுற்றுப்பிரகாரத்தில் நடராஜர் தம்பதி சமேதராக சூரியன், சந்திரன், அதிகார நந்தி, கன்னிமூல கணபதி, லட்சுமி சரஸ்வதி, பாலதண்டாயுபாணி, ஏகாம்பரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, சப்தமாதாக்கள், ஜுரதேவர், பைரவர், 63 நாயன்மார்கள், ஆகியோர் தனி தனி சன்னதிகளில் அருள்புரிகின்றனர்.

Theni: பக்தர்களே... காசிக்கு நிகரான பெரியகோவில்...! பெரியகுளம் முருகன் கோவிலுக்கு ஏன் இத்தனை சிறப்பு..?

சோழமன்னர் கால கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ள இக்கோவில். அகோரவீரபுத்திரர், ருத்ரதாண்டவர், துர்கை, மன்மதன் நவகிரகணங்கள் ஆகியோரும் அமைந்துள்ளனர். இங்குள்ள மயில் மண்டபத்தில் 27 நட்சத்திரங்களும் 12 ராசிகளும் பதிக்கப்பட்டுள்ளது இந்த மயில் மண்டபத்தில் உள்ள மயில் அபூர்வ ஒற்றை கல் மயில். இதன் மற்றொரு சிறப்பு இங்குள்ள மிருத்யுஞ்சர் சன்னதி இவர் மரணத்தை வென்றவர் என்பதால் அதிக அளவில் அறுபது, எண்பது திருமணங்கள் இங்கு நடைபெறுகிறது. ராஜேந்திர சோழமன்னன் கட்டியதால் இக்கோயில், அப்பகுதியில் பேச்சு வழக்கில் பெரியகோயில் என்ற சிறப்பு பெயருடன் விளங்குகிறது. இங்குள்ள முருகப்பெருமானான பாலசுப்பிரமணியரை தரிசனம் செய்தால் தீராத நோய்களும் தீரும் என்பது ஐதிகம்.

Theni: பக்தர்களே... காசிக்கு நிகரான பெரியகோவில்...! பெரியகுளம் முருகன் கோவிலுக்கு ஏன் இத்தனை சிறப்பு..?

இக்கோவில் இங்கு புகழ் பெற்ற வராக நதிக்கரையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வராக நதியின் இருகரையிலும் நேரெதிராக ஆண் மற்றும் பெண் மருத மரங்கள் அமைந்திருக்கின்றன. அதுவும் மருத மரங்களின் வேர்களுக்கிடையில் வராக நதி ஓடுகிறது. இந்த வராக நதிக்கரையில் நீராடினால் காசியில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை,  இந்நதியை பிரம்ம தீர்த்தம் என்றும் கூறுவர். இந்நதியில் நீராடினால் தீராத வியாதிகள் தீரவும் திருமண தோஷம் பிள்ளை இல்லா குறை போன்ற பிரச்னை தீர்க்கும் புண்ணிய ஸ்தலமாக இத்திருத்தலம் விளங்குவதால், தங்களின் நேர்த்திக்கடன், வழிபாடுகளை இந்த கோவிலில் செய்கின்றனர்  பக்தர்கள். மேலும் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் போன்ற வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

Theni: பக்தர்களே... காசிக்கு நிகரான பெரியகோவில்...! பெரியகுளம் முருகன் கோவிலுக்கு ஏன் இத்தனை சிறப்பு..?

இந்து கோவில்களின்  முக்கிய ஒன்றாக கருதப்படும் கோசாலைகள் (பசுமாடுகள் வளர்க்கப்படும் இடம்) இங்கு அமைந்துள்ளது. பக்தர்கள் தங்களின் முன்னோர்களுக்கு வழிபாடு நடத்திய பின் கோசாலையில் உள்ள பசுக்களுக்கு  கீரை, பழங்கள் கொடுத்து வணங்கி செல்வது இக்கோவிலின் சிறப்பாக கருதப்படுகிறது. இக் கோவிலில் திருவிழாக்கள், பிரதோஷங்கள், திருமணங்கள் என்று அனைத்தும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பெரியகுளம் என்ற ஊரின் சிறப்பு பெரியகோவில் என்பதாகும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
ABP Premium

வீடியோ

Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Embed widget