எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தேனி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்
சென்னை அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் மீது பாட்டில்கள் வீசியது வாகனத்தின் டயரை பஞ்சர் செய்துபோன்ற செயல்களை கண்டித்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேனியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்.
சென்னையில் அதிமுக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளிநடப்பு செய்த நிலையில் அவரின் மீது தண்ணீர் பாட்டில் வீசி தாக்கப்பட்டதைக் கண்டித்தும், அவருடைய பிரச்சார வாகனம் டயர்கள் பஞ்சர் ஆக்கப்பட்டதை கண்டித்தும் பெரியகுளத்தில் உள்ள தேனி பாராளுமன்ற அலுவலகத்தில் 40-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி தங்களது ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றபோது சட்டத்துக்குப் புறம்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது எனக் கூறி, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளிநடப்பு செய்தார். பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறியபோது சிலர் அவர் மீது தண்ணீர் பாட்டில்களை வீசினர் . மேலும் அவர் பயன்படுத்திய பிரச்சார வாகனத்தின் டயர் பஞ்சர் ஆக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த ஓபிஎஸ்சின் ஆதரவாளர்கள் பல்வேறு பகுதிகளில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான கோசங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Viral Video: ஜன்னலோர சீட்டில் ஜாலி பயணம் செய்த ’சூப்பர் மேன்’ கிளி.. வைரலாகும் வீடியோ..
இந்த நிலையில் ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், போடி, பெரியகுளம் பகுதிகளில் ஓபிஎஸ்சின் ஆதரவாளர்கள் அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் என எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். குறிப்பாக ஓபிஎஸ்சின் சொந்த ஊரான பெரியகுளத்தில் தேனி பாராளுமன்ற அலுவலகம் முன்பு அதிமுகவினர் ஒன்று கூடினர். 40-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் உறுப்பினர்களும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவமரியாதை செய்யப்பட்டதற்கு கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
AIADMK Meeting: ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்காது.. வைத்திலிங்கம் கருத்தால் பரபரப்பு
மேலும் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்தும் அவருடைய தூண்டுதலில் ஓ.பன்னீர்செல்வம் அவமரியாதை செய்யப்பட்டதாக கூறியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அம்மாவால் வழி நடத்தப்பட்ட கட்சியினை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மீட்டெடுப்போம் என கோஷங்களை எழுப்பினர். இதனால் பெரியகுளத்தில் உள்ள பாராளுமன்ற அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்