மேலும் அறிய

தேனி மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழை - பல லட்சம் மதிப்பிலான மரங்கள் சேதம்

பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான வாழை, பப்பாளி, முருங்கை, தென்னை உள்ளிட்ட விவசாய பயிர்கள் ஒடிந்து சேதம்.

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி , பெரியகுளம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும்  தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய நகரமான கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளையொட்டியுள்ள கம்பம், கூடலூர், உத்தமபாளையம், காமய கவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையின் காரணமாக பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்துள்ளது.  நீண்ட நாட்களாக வெயிலின் தாக்கம் சுட்டெரித்து கொண்டிருந்த நிலையில் திடீரென பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தேனி மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழை - பல லட்சம் மதிப்பிலான மரங்கள் சேதம்

பலத்த காற்றுக்கு மரங்கள் சாய்ந்து சேதம்

இந்த நிலையில்  பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரம் பகுதியில் நேற்று மாலை பலத்த சூராவளி காற்றுடன் சாரல் மழை பெய்தது. அப்பொழுது வீசிய பலத்த சூராவளி காற்றால்  குள்ளப்புரம், சங்கரமூர்த்திபட்டி, ஒத்த வீடு   உள்ளிட்ட பகுதிகளில் 3,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள், இரண்டு ஏக்கரில் நடவு செய்யப்பட்டு இருந்த பப்பாளி மரங்கள், மேலும் 3 ஏக்கரில் முருங்கை மரங்கள்  மற்றும் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தது.

தேனி மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழை - பல லட்சம் மதிப்பிலான மரங்கள் சேதம்

இந்நிலையில் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள் கூறுகையில், "சூறாவளி காற்றால் இரண்டு மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பிஞ்சு வாழை தார்கள் ஒடிந்து சேதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் பப்பாளி மரங்கள் காய் பலம் பிஞ்சு உள்ளிட்டவைகளும் ஒடிந்து சேதம் அடைந்ததோடு முருங்கை மரங்கள், தென்னை மரங்கள் காய்களுடன்  ஒடிந்து சேதம் ஏற்பட்டது. மேலும் சூறாவளி காற்றால் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான  வாழை, பப்பாளி, முருங்கை, தென்னை  உள்ளிட்ட விவசாய விலை பொருட்கள்  ஒடிந்து சேதம் ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசு ஊழிய கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கம்பம் பகுதியில் பலத்த காற்றுக்கு ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் ஒடிந்து சேதம்

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த விவசாயி முத்தையா மற்றும் அவரது மகன் கூடலிங்கம் ஆகியோர் கம்பம் கூடலூர் சாலையில் உள்ள பெண்கள் கல்லூரிக்கு பின்புறம் உள்ள சாளமலை ஈஸ்வரன்கோவில் பகுதியில் உள்ள தனுஷ்கோடி என்பவரது தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து வாழை விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது சுமார் 10 ஆயிரம் நாழிப்பூவன் வாழை பயிர் செய்து விவசாயத்தை கவனித்து வந்துள்ளனர். இந்நிலையில், இன்று மாலை கம்பம், கூடலூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

தேனி மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழை - பல லட்சம் மதிப்பிலான மரங்கள் சேதம்

இந்த பலத்த காற்றில், விவசாயி முத்தையாவின் பத்து மாத வளர்ச்சியடைந்த ஆயிரக்கணக்கான வாழைகள் ஒடிந்து சேதமானது. சேதமடைந்த வாழைகள் அனைத்தும் இன்னும் ஓரிரு மாதத்தில் பலன் எடுக்கும் பருவத்தில் இருந்ததால் விவசாயிக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயி கூட லிங்கம் கூறுகையில்,  “பக்குவமாய் பாதுகாத்து வளர்த்து வந்த வாழைகள் இன்னும் ஓரிரு மாதத்தில் பலன் எடுக்கும் பருவத்தில் இருந்தபோது திடீரென பெய்த மழையால் ஆயிரக்கணக்கான வாழைகள் ஒடிந்து சேதமாகி உள்ளது. இதனால் லட்டசக்கணக்கான ருபாய் இழப்பு ஏற்பட்டள்ளது. அரசு இதை கருத்தில்கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget