மேலும் அறிய

Theni: மின் உற்பத்தி; சுருளியாறு மின் நிலையத்தில் 3 ஆண்டுகளாக தொடரும் அவலம்

மேகமலை அணைகளின் நீரில் மின் உற்பத்தி செய்ய முடியாமல் வீணாகி வருகிறது. சுருளியாறு மின் நிலையத்தில் மூன்று ஆண்டுகளாக தொடரும் அவலம். நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் மேகமலை பகுதியில் வன உயிரினங்கள் அதிகம் நடமாட்டம் உள்ள வண்ணாத்திபாறை அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் சுருளியாறு மின் நிலையம் உள்ளது. மேகமலையில் ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, அணைகளில் சேரும் தண்ணீரை இரவங்கலாறு அணைக்கு கொண்டு வந்து, அங்கிருந்து 2900 மீட்டர் நீள குழாய் மூலம் தண்ணீரை இறக்கி 141 கனஅடி நீரில் 35 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும். 

Latest Gold Silver Rate: ஒரே நாளில் வரலாறு காணாத விலை ஏற்றத்தில் தங்கம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்.. எவ்வளவு தெரியுமா?

Theni: மின் உற்பத்தி; சுருளியாறு மின் நிலையத்தில்  3 ஆண்டுகளாக தொடரும் அவலம்

2021 செப் 4இல் குழாயில் ஏற்பட்ட சேதத்தால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 2023 ஜனவரியில் ரூ. 10 கோடி செலவில் 220 மீட்டர் நீளத்திற்கு சேதமடைந்த குழாயை சீரமைத்தனர். பைப் லைன் முழுவதும் பெயிண்டிங் செய்யப்பட்டது. மின்நிலையத்திற்குள் இருந்த சிறு பழுதும் நீக்கி 2023 ஜுலை 17 ல் மின் உற்பத்தி துவங்கியது. இரண்டே நாட்களில் மீண்டும் பழுது ஏற்பட்டு மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. 2வது முறையாக மின் உற்பத்தி நிறுத்தி நான்கு மாதங்களை கடந்துள்ளது. தென்மேற்கு பருவமழையை விட வடகிழக்கு பருவ மழை காலங்களில் தான் மேகமலை அணைகளில் தண்ணீர் பெருகும். அந்த தண்ணீரை பயன்படுத்தி தினமும் சுருளியாறு மின்நிலையத்தில் ஆண்டு முழுவதும் மின் உற்பத்தி நடைபெறும். 

Uttarkashi Tunnel Rescue: 17 நாட்கள் இருட்டில் நடந்தது என்ன? - விவரிக்கும் மீட்கப்பட்ட தொழிலாளி விஸ்வஜீத் குமார்

Theni: மின் உற்பத்தி; சுருளியாறு மின் நிலையத்தில்  3 ஆண்டுகளாக தொடரும் அவலம்

2021ல் இருந்து தற்போது 2023 வரை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வடகிழக்கு பருவமழை தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. தற்போது பெய்து வரும் சாரல் மழையால் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. ஆனால் பெருகும் தண்ணீரை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்ய முடியவில்லை. மின் உற்பத்தி இழப்பிற்கு அதிகாரிகளே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காரணம் இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டர் மற்றும் இயந்திரங்கள், நாசில்கள் உள்ளிட்ட உபகரணங்களை முறையாக தகுதிவாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு பரிசோதித்த பின் உற்பத்தியை துவக்கியிருக்க வேண்டும். ஆனால் இதில் கவனம் செலுத்தாமல், குழாய் லைன் சரி செய்தவுடன், மின் உற்பத்தியை துவக்கி அவசரம் காட்டியது, அதிகாரிகளின் அஜாக்கிரதையை காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

5 Years of 2.0: தமிழ் சினிமாவின் பிரமாண்டம்.. வசூல் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினி.. 2.0 வெளியான நாள் இன்று..!

Theni: மின் உற்பத்தி; சுருளியாறு மின் நிலையத்தில்  3 ஆண்டுகளாக தொடரும் அவலம்

IND vs AUS: சதங்களின் மன்னன் ரோஹித் சர்மாவை சமன் செய்த மேக்ஸ்வெல்.. கலக்கும் ஆல்ரவுண்டர் அதிரடி நாயகன்!

தற்போது மின்நிலையத்திற்குள் உள்ள இயந்திரங்களை சரி செய்ய குறுகிய கால டெண்டர் விடப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனாலும் இயந்திர பழுது நீக்கி மீண்டும் மின் உற்பத்தியை துவங்கும் முன் வடகிழக்கு பருவமழை முடிந்துவிடும். இதனால் லட்சக்கணக்கான யூனிட் மின்உற்பத்தி செய்ய முடியாமல் போனது. சுருளியாறு மின்நிலையம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற கவனக்குறைவு ஏற்படாவண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வெட்டி பேச்சு; வெறும் காப்பி பேஸ்ட் - இபிஎஸ்சை சரமாரியாக சாடிய முதல்வர் ஸ்டாலின் 
வெட்டி பேச்சு; வெறும் காப்பி பேஸ்ட் - இபிஎஸ்சை சரமாரியாக சாடிய முதல்வர் ஸ்டாலின் 
Gold Rate: சம்பவம் செய்த தங்கம் விலை... இன்றைய விலை என்ன தெரியுமா.?
சம்பவம் செய்த தங்கம் விலை... இன்றைய விலை என்ன தெரியுமா.?
Savukku Shankar:
Savukku Shankar: "தப்பு பண்ணிட்டேன்! அப்படி பேசியிருக்கக் கூடாது" சவுக்கு சங்கரா இப்படி பேசிருக்காரு?
Erode By-Election: திடீர் ட்விஸ்ட்! தேர்தல் அதிகாரி அதிரடி மாற்றம்! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மீண்டும் பரபரப்பு!
Erode By-Election: திடீர் ட்விஸ்ட்! தேர்தல் அதிகாரி அதிரடி மாற்றம்! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மீண்டும் பரபரப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

வேங்கைவயல் கிளம்பும் விஜய்! MEETING-ல் பக்கா ஸ்கெட்ச்! ஜான் ஆரோக்கியசாமி ஐடியாMaharashtra : Maharashtra Women Scheme.. பணத்தை திருப்பி கேட்ட அரசு! அதிர்ந்து போன பெண்கள்!Vivek Ramaswamy DOGE Resign : பதவியேற்ற TRUMP..BYE சொன்ன விவேக்! திடீர் TWISTJagabar Ali Murder : ’’அநியாயம் பண்றாங்க’’அதிமுக நிர்வாகி படுகொலைஇறக்கும் முன் கடைசி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெட்டி பேச்சு; வெறும் காப்பி பேஸ்ட் - இபிஎஸ்சை சரமாரியாக சாடிய முதல்வர் ஸ்டாலின் 
வெட்டி பேச்சு; வெறும் காப்பி பேஸ்ட் - இபிஎஸ்சை சரமாரியாக சாடிய முதல்வர் ஸ்டாலின் 
Gold Rate: சம்பவம் செய்த தங்கம் விலை... இன்றைய விலை என்ன தெரியுமா.?
சம்பவம் செய்த தங்கம் விலை... இன்றைய விலை என்ன தெரியுமா.?
Savukku Shankar:
Savukku Shankar: "தப்பு பண்ணிட்டேன்! அப்படி பேசியிருக்கக் கூடாது" சவுக்கு சங்கரா இப்படி பேசிருக்காரு?
Erode By-Election: திடீர் ட்விஸ்ட்! தேர்தல் அதிகாரி அதிரடி மாற்றம்! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மீண்டும் பரபரப்பு!
Erode By-Election: திடீர் ட்விஸ்ட்! தேர்தல் அதிகாரி அதிரடி மாற்றம்! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மீண்டும் பரபரப்பு!
1 கோடி ரூ. சன்மானம்! கொல்லப்பட்ட ஜலபதி உயிருக்கு ஏன் இவ்வளவு மதிப்பு? யார் இந்த மாவோயிஸ்ட்?
1 கோடி ரூ. சன்மானம்! கொல்லப்பட்ட ஜலபதி உயிருக்கு ஏன் இவ்வளவு மதிப்பு? யார் இந்த மாவோயிஸ்ட்?
நாங்கதான்! ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் துறையில் தமிழ்நாடு செம ஸ்ட்ராங் - சுவிட்சர்லாந்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
நாங்கதான்! ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் துறையில் தமிழ்நாடு செம ஸ்ட்ராங் - சுவிட்சர்லாந்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
IND vs ENG 1st T2O: முதல் டி20! இங்கிலாந்தை பொளக்குமா இந்தியா? சூர்யா படையை சுளுக்கு எடுப்பார்களா பட்லர் பாய்ஸ்?
IND vs ENG 1st T2O: முதல் டி20! இங்கிலாந்தை பொளக்குமா இந்தியா? சூர்யா படையை சுளுக்கு எடுப்பார்களா பட்லர் பாய்ஸ்?
மகளின் திருமணத்தை சிம்பிளாக நடத்திய லொள்ளு சபா நடிகர் சுவாமிநாதன்!
மகளின் திருமணத்தை சிம்பிளாக நடத்திய லொள்ளு சபா நடிகர் சுவாமிநாதன்!
Embed widget