போடி ஜமீன்தார் முன்னிலையில் நடந்த ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்
போடிநாயக்கனூர் ஜமீன்தார் வடமலை ராஜா பாண்டியன் மற்றும் தேனி மாவட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் உதயகுமார் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
தேனி மாவட்ட அளவில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் போடியில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அணிவகுப்பு ஊர்வலத்தை போடிநாயக்கனூர் ஜமீன்தார் வடமலை ராஜா பாண்டியன் மற்றும் தேனி மாவட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் உதயகுமார் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
TN Rains: குடை முக்கியம் பிகிலு! 12ம் தேதி வரை தமிழ்நாட்டில் வெளுக்கப்போகும் மழை - முழு விவரம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் திருவள்ளுவர் சிலை அருகே தொடங்கிய அணிவகுப்பு ஊர்வலம், காமராஜர் பஜார் வீதி, தேவர் சிலை, ஸ்டேட் பேங்க், குப்பி நாயக்கன் பட்டி, வழியாக வஞ்சி ஓடைப் பகுதி, மார்க்கெட் வீதி என நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று திருவள்ளுவர் சிலை திடலில் நிறைவடைந்தது. இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் தேனி மாவட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Breaking News LIVE 7 Oct : சென்னை மெரினாவில் மட்டும் 18.5 டன் குப்பைகள் அகற்றம்
இராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் எனப்படும் ஆர்எஸ்எஸ் இயக்கம் துவக்கப்பட்ட நாளான விஜயதசமியை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்ட அளவில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் போடியில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. அணிவகுப்பு ஊர்வலத்தை போடிநாயக்கனூர் ஜமீன்தார் வடமலை ராஜா பாண்டியன் மற்றும் தேனி மாவட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் உதயகுமார் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
போடிநாயக்கனூர் திருவள்ளுவர் சிலை அருகே தொடங்கிய அணிவகுப்பு ஊர்வலம், காமராஜர் பஜார் வீதி, தேவர் சிலை, ஸ்டேட் பேங்க், குப்பி நாயக்கன் பட்டி, வழியாக வஞ்சி ஓடைப் பகுதி, மார்க்கெட் வீதி என நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று திருவள்ளுவர் சிலை திடலில் நிறைவடைந்தது.
அதனைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் இயக்க கொடி ஏற்றுதல், புத்தகம் வெளியீட்டு நிகழ்வு மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கட்ராமன் சிறப்புரையாற்றினார். இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் தேனி மாவட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்திற்காக தேனி மாவட்ட கூடுதல் துணைக் காவல் கண்காணிப்பாளர் வினோஜி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.