Breaking News LIVE 7 Oct : மெரினா சாகச நிகழ்ச்சி.. 5 பேர் உயிரிழப்பு வேதனையளிக்கிறது - விஜய், தவெக தலைவர்
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
LIVE
Background
- சென்னை கோபாலபுரத்தில் ரூபாய் 25 கோடி மதிப்பில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு விழா பூங்கா இன்று திறப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
- சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்திய வான் படை விமான சாகசம் – லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்று அசத்தல்
- சென்னையில் நடைபெற்ற விமான சாகசத்தை உலகிலேயே அதிகளவு மக்கள் பார்த்து சாதனை
- சென்னை விமான சாகசத்தை பார்க்க லட்சக்கணக்கான மக்கள் குவிந்த நிலையில் 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு – உரிய நிவாரணம் கோரி உயிரிழந்தோர் உறவினர்கள் கோரிக்கை
- 5 பேர் உயிரிழந்த விவகாரம்; விமானப் படை சாகசத்தை காண வந்தவர்களின் வசதிக்காக கேட்கப்பட்டதை விட அதிக வசதிகள் செய்து தரப்பட்டது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
- வான் சாகச நிகழ்ச்சி; 5 பேர் உயிரிழப்பு – அரசு முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
- இந்திய வான் படை சாகச நிகழ்ச்சி; அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
- சமுதாயத்தில் நல்லிணக்கத்தோடு இருக்க வேண்டும் என்பதே காந்தி நமக்கு அளித்த போதனை – முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்
- திருப்பதி லட்டு விவகாரத்தில் பக்தர்களுக்கு தேவையில்லாத குழப்பத்தை ஆந்திர அரசு ஏற்படுத்துகிறது – தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை குற்றச்சாட்டு
- சேலம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ரூபாய் 2 ஆயிரத்து 905 கோடி மதிப்பில் பயிர்க்கடன் – அமைச்சர் ராஜேந்திரன் தகவல்
- நாகப்பட்டினத்தில் த.வெ.க. – சி.பி.எம். இடையே மோதல் – பலர் மருத்துவமனையில் அனுமதி
- நீலகிரி, கோவை உள்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- வேலூர் அருகே தந்தை இயக்கிய டிராக்டரில் சிக்கி மகள் உயிரிழந்த சோகம்
- செங்கல்பட்டு அருகே கல்லூரி மாணவி மாயம் – 2வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்
- இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் முக்கிய பேச்சுவார்த்தை
- ஹரியானா, ஜம்மு – காஷ்மீரில் நாளை வாக்கு எண்ணிக்கை – 3 அடுக்கு பாதுகாப்பு
- மேகலாயாவில் ஒரே நாளில் கொட்டித் தீர்த்த கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு
மெரினா சாகச நிகழ்ச்சி.. 5 பேர் உயிரிழப்பு வேதனையளிக்கிறது - விஜய், தவெக தலைவர்
சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— TVK Vijay (@tvkvijayhq) October 7, 2024
இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள்…
Breaking News LIVE 7 Oct: வான் வழி சாகச நிகழ்ச்சி உயிரிழப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி!
சென்னையில் நடந்த விமானப்படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியைக் காணவந்து உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி அளித்துள்ளார்.
"ஜெயலலிதா தூங்கியதால் கடந்த 2015ம் ஆண்டு சென்னையே வெள்ளத்தில் மூழ்கியது" - ஆர்.எஸ் பாரதி
"ஜெயலலிதா தூங்கியதால் கடந்த 2015ம் ஆண்டு சென்னையே வெள்ளத்தில் மூழ்கியது" - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி
அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, வரும் 9ம் தேதி லட்ச தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
உமர் காலித்தின் ஜாமின் மனு மீதான விசாரணையை மீண்டும் ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்!
சமூக செயற்பாட்டாளர் உமர் காலித்தின் ஜாமின் மனு மீதான விசாரணையை மீண்டும் ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்!
இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற அமர்வு கூடாததால் விசாரணை நவம்பர் 25ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றிருந்த உமர் காலித், கடந்த 2020 பிப்ரவரியில் நடந்த டெல்லி கலவரத்திற்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டு UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்!