மேலும் அறிய
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
18 ரயில் நிலையங்களில் நடைமேடைகள் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. - மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்.

மதுரை ரயில்நிலையம் மறுசீரமைப்பு
Source : whatsapp
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சுதந்திர தின விழா
தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பாக 80 ஆவது சுதந்திர தின விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது. மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ரயில்வே காலனி செம்மண் திடலில் தேசிய கொடி ஏற்றி வைத்து ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், சாரண, சாரணியர், பள்ளி மாணவ, மாணவிகள் வழங்கிய அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார்.
மதுரை கோட்டத்தில் பயணிகள் ரயில்கள் மூலம் 1.71 கோடி பயணிகள் கையாளப்பட்டுள்ளனர்.
விழாவில் அவர் பேசும்போது..," கடந்த நான்கு மாதங்களில் ஒட்டுமொத்த மதுரை கோட்ட ரயில்வே வருமானம் ரூபாய் 490.16 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 8.28 சதவீதம் அதிகமாகும்.
அதேபோல பயணச்சீட்டு வருமானம் கடந்த ஆண்டை காட்டிலும் 13.34 சதவீதம் அதிகரித்து ரூபாய் 328.57 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் சரக்கு போக்குவரத்து வருமானம் மற்றும் இதர வருமானங்கள் முறையே ரூபாய் 125.44 மற்றும் 11.64 கோடி ஈட்டப்பட்டுள்ளது. பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வோர் மீது அபராதம் விதிப்பது போன்ற இதர பயணிகள் வருமானம் 23 சதவீதம் அதிகரித்து 24.5ரூபாய் கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களில் மதுரை கோட்டத்தில் பயணிகள் ரயில்கள் மூலம் 1.71 கோடி பயணிகள் கையாளப்பட்டுள்ளனர்.
அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம்
மதுரை கோட்டத்தில் 17 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் ரூபாய் 292.52 கோடி செலவில் ஒரு சீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த திட்டத்தின் கீழ் காரைக்குடி, சோழவந்தான், மணப்பாறை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு மார்ச் மாதம் முதல் பயணிகள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. தற்போது பழனி, பரமக்குடி, அம்பாசமுத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் நிறைவு பெற்று புதிய நவீன வசதிகளுடன் பயணிகள் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது.
நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள்
மதுரை ரயில் நிலையம் இரு நுழைவாயில்களுடன் மூன்று மாடி ரயில் நிலைய கட்டடம், பெரியார் பேருந்து நிலையத்தை இணைக்கும் சுரங்கப்பாதை, ரயில் பாதை மேற்புற பகுதியில் 42 மீட்டர் அகல பயணிகள் தங்குமிடம், 37 மின் தூக்கிகள், 27 மின் ஏணிப்படிகள், நடை மேம்பாலங்கள், பல்லடுக்கு வாகன காப்பகங்கள், ஆகிய நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது போன்ற வசதிகளுடன் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரூபாய் 112 கோடி செலவில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் நிறைவு பெறுநிலையில் உள்ளது. திருநெல்வேலி ரயில் நிலையத்திலும் ரூபாய் 100 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன. 18 ரயில் நிலையங்களில் நடைமேடைகள் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















