Mullai Periyar Dam: தீவிரம் அடைந்த பருவமழை; முல்லை பெரியாறில் கிடு கிடுவென உயர்ந்து வரும் நீர்மட்டம்
அணையிலிருந்து 1000கன அடிக்கும் அதிகமாக நீர் திறக்கப்பட்டுள்ளாதால் கரையோரப் பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் அணைக்கு நீர் வரத்து 5,389 கன அடியாக வரத் தொடங்கியுள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் இரண்டு அடி உயர்ந்து 121.80 அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக நீர் திறக்கபட்டுள்ளாதால் முல்லைப் பெரியாற்றின் கரையோரப் பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Train berth collapses: சரியாக மாட்டாமல் சென்ற பயணி.. ரயிலில் நடுபடுக்கை விழுந்து ஒருவர் உயிரிழப்பு
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாய நீர் ஆதாரமாகவும் உள்ளது. கடந்த சில தினங்களாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைவாக வந்ததால் அணையின் நீர்மட்டம் சரிந்து வந்தது.
இந்நிலையில் தற்பொழுது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை அதிக கன மழையாக பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து ஐந்து ஆயிரத்து 5389 கன அடியாக வரத் தொடங்கி அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகின்றது.
முதலாம் போக நெல் சாகுபடி பணிகளைத் தொடங்கி வரும் விவசாயிகள் அணைக்கு நீர் வரத்து ஐந்தாயிரம் கன அடிக்கும் அதிகமாக ஏற்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.தற்பொழுது 152 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 121. 80 அடியாகவும் அணையில் இருந்து குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்காக 1,089 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்படுகின்றது.அணையில் மொத்த நீர் இருப்பு 2,984 மில்லியன் கன அடியாக உள்ளது.
அணையில் இருந்து ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வெளியேற்றப்படுவதால் லோயர் கேம்பில் இருந்து வீரபாண்டி வரை உள்ள முல்லைப் பெரியாற்றின் கரையோர பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தற்போது முல்லைப் பெரியாறு அணையில் மழையின் அளவு 55.0 மி.மிதேக்கடியில் 47.2 மிமி பதிவாகியுள்ளது.