Watch Video: மேகமலையில் திடீர் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய வனத்துறை
மேகமலை அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு. துரிதமாக செயல்பட்டு அருவி அருகே நடந்து வந்த சுற்றுலாபயணிகளுக்கு ஆபத்தின்றி வனத்துறையினர் மீட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
மேகமலை அருவியில் திடீரென கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடி அருகே அமைந்திருக்கும் தரைப்பாலத்தை மூழ்கடித்து சீறிப்பாய்ந்தது வெள்ளப்பெருக்கு. துரிதமாக செயல்பட்டு அருவி அருகே நடந்து வந்த சுற்றுலா பயணிகளை ஆபத்தின்றி வனத்துறையினர் மீட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
சுற்றுலா தலமாக விளங்கும் சின்னச்சுருளி
தமிழக கேரள எல்லையை மாவட்டமாகவும் மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ்ந்த அழகிய விவசாயம் சார்ந்த பகுதியாக இருந்து வருகிறது தேனி மாவட்டம். இங்கு சுற்றுலா தலங்களாக மிகவும் பிரபலமான கம்பம் அருகே உள்ள சுருளி அருவி, கும்பக்கரை அருவி, குரங்கனி மலைப்பகுதி, மேகமலை என உள்ளது. இதில் ஆண்டிபட்டி அருகே உள்ள மேகமலை வனப்பகுதியிலிருந்து பெருக்கெடுத்து வரும் தண்ணீரால் உருவாகும் கோம்பைத்தொழு அருகே சின்னச்சுருளி என அழைக்கப்படும் சுற்றுலா தலமாக மாறி வரும் சின்னச்சுருளி அருவி உள்ளது. ஆண்டிபட்டி தாலுகா கோம்பைதொழு அருகே வனப்பகுதியில் மேகமலை அருவி அமைந்துள்ளது .
திடீர் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப்பெருக்கு
இங்கு வரும் சுற்றுலாபயணிகள் அருவியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் முன்பாக உள்ள சோதனை சாவடி அருகிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு அருவிக்கு நடந்து சென்று குளித்து விட்டு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் 20க்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளித்து விட்டு வனத்துறை சோதனைசாவடி அருகே உள்ள தரைப்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென மலைப்பகுதிகளில் கொட்டிய கனமழையால் அருவியில் தண்ணீர்வரத்து பல மடங்கு அதிகரித்து வனத்துறை சோதனைச்சாவடிக்கு முன்பாக தரைப்பாலத்தை அடித்து செல்லும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு பாய்ந்தது.
Accident: எமனாக வந்த மாடு..! அப்பளம் போல் நொறுங்கிய கார்! 5 பேர் பலி: சென்னை அருகே சோகம்!
சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக மீட்ட வனத்துறையினர்
இந்த நிலையில் தண்ணீர் அதிகமாக வரப்போவதை முன்பாகவே அறிந்த பாதுகாப்பு பணியில் இருந்த வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகளை அருவியின் பாலத்தில் இருந்து பாதுகாப்பாக பாலத்திற்கு மேல் அங்கேயே காத்திருக்க வைத்தனர். அதில் வந்த மீதி பத்துக்கும் மேற்பட்டோர் சோதனை சாவடியில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டனர். இதையடுத்து ஒரு மணி நேரத்திற்கு பின்னர் தண்ணீர் வரத்து சற்று குறைந்த பின்னர் பாதுகாப்பாக பாலத்தை கடந்து செல்ல வைத்து சுற்றுலாபயணிகளை வனத்துறையினர் மீட்டு வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
மேகமலையில் திடீர் வெள்ளப்பெருக்கு!https://t.co/wupaoCzH82 | #Megamalai #TNRains #TamilNews pic.twitter.com/KcziJFzonl
— ABP Nadu (@abpnadu) May 15, 2024
தண்ணீர் வரும் சமயத்தில் சுற்றுலாபயணிகள் பாலத்திலேயே நடந்து வந்து கொண்டிருந்த நிலையில் வனத்துறை துரிதமாக செயல்படாவிட்டால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். வனத்துறை அதிகாரிகளின் சரியான பாதுகாப்பு பணியால் அங்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.