மேலும் அறிய
Advertisement
Accident: எமனாக வந்த மாடு..! அப்பளம் போல் நொறுங்கிய கார்! 5 பேர் பலி: சென்னை அருகே சோகம்!
kalpakkam car accident " செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கார் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் "
மதுராந்தகம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென விபத்துக்குள்ளாகி அப்பளம் போல் நொறுக்கியது. இதில் காரில் பயணித்த ஓட்டுனர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனில்லாமல் இருவர் உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே வயலூர் பகுதியில் கிழக்கு கடற்கரை கூவத்தூரில், இருந்து சென்னை நோக்கி பயணித்த கார் திடீரென விபத்தில் சிக்கியது. அங்கு நின்றிருந்த பசுமாடு சாலை கடக்க முயன்றபோது, வாகனத்தை திருப்பியதால் திடீரென வேகத்தை கட்டுப்படுத்தியதால் கார் புரண்டு விபத்துக்குள்ளாகியது.
இதனை அடுத்து கார் அப்பளம் போல் நொறுங்கியது. அருகில் இருந்தவர்கள் இந்த அதிர்ச்சி சம்பவத்தை பார்த்து உடனடியாக காரில், உயிருக்கு போராடி கொண்டு இருந்த நபர்களை மீட்க முயற்சி செய்தனர். இதுகுறித்து உடனடியாக சதுரங்கப்பட்டினம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும் மற்றும் ஊர் பொதுமக்களும் இணைந்து காரில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். முதற்கட்டமாக காரில் உயிருக்கு போராடி இருந்த இரண்டு நபர்களை காவல்துறையினர் பொதுமக்கள் உதவி உடன் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் மூன்று பேர் உயிரிழப்பு
மேலும் காரில் பின்புறத்தில் சிக்கிய மூன்று பேர் கார் நசுங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காருக்குள் சிக்கியவர்களை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் போராடி காரின் கூடாரத்தை மிஷின் மூலம் வெட்டி எடுத்து உடல்களை மீட்டு உடற்குறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது குறித்து சதுரங்கப்பட்டினம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் அதிவேகத்தில் இயக்கியதால், இத்தகைய கொடூர விபத்து விபத்து ஏற்பட்டதாக கூறியுள்ளனர். அதேபோன்று குறுக்கே மாடு வந்தது என நேரில் பார்த்தவர்கள் கூறிய தகவலையும் காவல்துறையினர் பதிவு செய்து கொண்டனர். இந்தநிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற இரண்டு பேரில் ஒருவர் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் .
பாண்டிச்சேரியில் இருந்து வந்த வாகனம்
சென்னை சூலை பகுதியைச் சேர்ந்த ஐந்து நண்பர்களும், விடுமுறைக்காக பாண்டிச்சேரி சென்று விட்டு திரும்பிய வழியில் இந்த கொடூர விபத்து நடைபெற்றுள்ளது என்பது முதற்கட்ட விசாரணை தெரிய வந்துள்ளது. சாலையில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளான பொழுது, சாலையில் மூன்று முறை பல்டி அடித்துள்ளது. இதன் காரணமாகவே கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலியாகி உள்ளனர். இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கொடூர விபத்தில் 5 பேர் உயிர் இழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (22), வடபழனி பகுதியை சேர்ந்த ஏழுமலை (30). சூளை எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த விக்கி ( 28 ), மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த யுவராஜ் ( 24 ) என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது .
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion