விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் முடிந்து நடந்த சோகம்; டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் உயிரிழப்பு
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் பள்ளியில் பயிலும் மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு.
தேவாரம் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் முடிந்து சொந்த ஊர் திரும்பிய போது டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வந்த நிலையில், தேனி மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழாவினை மிகுந்த உற்சாகத்துடன் விநாயகர் சிலை வைத்து வழிபட்டு பொதுமக்கள் கொண்டாடினர்.
பயங்கர ஷாக்.. 1556 கிலோ கெட்டுப்போன இறைச்சி! சென்னை செண்ட்ரல் ஸ்டேஷனில் வந்திறங்கிய ஆபத்து..
சிறுவர்களும் ஆங்காங்கே சிறு, சிறு சிலைகள் வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மறவபட்டியை சேர்ந்த பள்ளி சிறுவர்கள் விஷால், நிவாஸ், கிஷோர் மற்றும் அவரது நண்பர்கள் சிலருடன் அவர்களது வீடு அருகே விநாயகர் சிலையை வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியுள்ளனர். அதன் பின்னர் விநாயகர் சிலையை டிராக்டரில் அலங்காரம் செய்து கரைப்பதற்காக சிந்தலைசேரிக்கு எடுத்து சென்றுள்ளனர்.
Producer Dilli Babu: ராட்சசன், பேச்சுலர் பட தயாரிப்பாளர் டில்லி பாபு திடீர் மரணம் - காரணம் என்ன?
Breaking News LIVE: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
அந்த டிராக்டர் வாகனத்தை விநாயகமூர்த்தி என்ற டிரைவர் ஓட்டிச் சென்றுள்ளார். அங்குள்ள குளத்தில் சிலையை கரைத்து விட்டு அங்கிருந்து திரும்பும் வழியில் எதிர்பாராத விதமாக சாலையின் ஒரம் இருந்த 3 அடி பள்ளத்தில் டிராக்டர் தலை குப்புற கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த விஷால் (14) நிவாஷ் (14) மற்றும் கிஷோர் (14) ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தேவாரம் காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மூன்று சிறுவர்களின் உடலை கைப்பற்றி உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் பள்ளியில் பயிலும் மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அவர்களது பெற்றோர்களிடமும் அப்பகுதி கிராம மக்கள் மற்றும் மாணவர்களிடமும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.