மேலும் அறிய
Breaking News LIVE: வீடுகள் முன்பு NO PARKING போர்டு வைக்க தடை..! நீதிமன்றம் உத்தரவு..!
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
Key Events

ப்ரேக்கிங் நியூஸ்
Source : twitter
Background
- மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகள் பாரிஸ் மாநகரில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவு
- பாராலிம்பிக் தொடரில் புது வரலாறு படைத்த இந்தியா; இதுவரை இல்லாத அளவிற்கு 7 தங்கம் உள்பட 29 பதக்கங்களை வென்று அசத்தல்
- பாரலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமைந்தது – வீரர்கள், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு
- தி.மு.க.வில் விரைவில் பல அதிரடி மாற்றம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பரிந்துரைகளை அளிக்க ஒருங்கிணைப்புக்குழு முடிவு
- தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகர் விஜய்
- தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கு காவல்துறையினர் அனுமதி – உற்சாகத்தில் விஜய் தொண்டர்கள்
- நடிகர் சங்கத்திற்கான கடனை அடைப்பதற்கான கலைநிகழ்ச்சி; ரஜினிகாந்த், கமல்ஹாசன் பங்கேற்பதாக நடிகர் கார்த்தி தகவல்
- சர்ச்சைக்குரிய பேச்சாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
- தன் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாகவும், தன்னை சித்தர்கள் வழிநடத்துவதாகவும் மகாவிஷ்ணு போலீசிடம் வாக்குமூலம்
- தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து கரைத்த பொதுமக்கள்
- விநாயகர் சிலை ஊர்வத்தின்போது கும்பகோணம், தேனி உள்ளிட்ட இடங்களில் தகராறு
- பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு; அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்ட முதலமைச்சர் மம்தாவுக்கு மே.வ. ஆளுநர் அறிவுறுத்தல்
- இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று அறிகுறி; தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை
- ஹரியானா காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வினேஷ் போகத் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார்
- பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் பற்றி பேச பிரிஜ்பூஷனுக்கு பா.ஜ.க. தலைமை தடை விதித்துள்ளதாக தகவல்
21:32 PM (IST) • 09 Sep 2024
Breaking News LIVE: வீடுகள் முன்பு NO PARKING போர்டு வைக்க தடை..! நீதிமன்றம் உத்தரவு..!
Breaking News LIVE: வீடுகள் முன்பு NO PARKING போர்டு, தடுப்புகள் வைத்திருப்போர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
19:08 PM (IST) • 09 Sep 2024
Breaking News LIVE: இந்தியாவில் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு ஒருவருக்கு உறுதி
இந்தியாவில் குரங்கு அம்மை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்பட்ட ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















