மேலும் அறிய

Producer Dilli Babu: ராட்சசன், பேச்சுலர் பட தயாரிப்பாளர் டில்லி பாபு திடீர் மரணம் - காரணம் என்ன?

Producer Dilli Babu: தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான, டில்லி பாபு உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

Producer Dilli Babu: டில்லி பாபு தமிழ் சினிமாவில் ராட்சசன் மற்றும் பேச்சுலர் போன்ற வெற்றி படங்களை தயாரித்தவர் ஆவார்.

தயாரிப்பாளர் டில்லி பாபு மரணம்:

தமிழ் சினிமா துறையில் ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி என்பது தரமான மற்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உள்ளது. பல இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை அந்நிறுவனத்தை சேரும். இதனை ஜி. டிப்பி பாபு என்பவர் தான் நடத்தி வந்தார். இவர் பல்வேறு புதிய முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்ததால், ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி பேனரில் படம் வெளியானாலே நிச்சயம் புதுமையாக இருக்கும் என்ற நம்பகத்தன்மையை உருவாக்கினார். இந்நிலையில் தான், யாரும் எதிர்பாராத விதமாக டில்லி பாபு உயிரிழந்துள்ளார்.

டில்லி பாபு மரணத்திற்கான காரணம்..!

கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவு ஏற்பட்டு, டில்லி பாபு தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை டில்லி பாபுவின் உயிர் பிரிந்தது. அவரின் இந்த திடீர் மறைவு தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என பல்வேறு தரப்பினரும், டில்லி பாபுவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டில்லி பாபுவின் திரை பயணம்:

2015ம் ஆண்டு வெளியான உறுமீன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமான டில்லி பாபு, தொடர்ந்து பல்வேறு படங்களை தயாரித்துள்ளார்.  அவரது முதல்  படத்தில் பாபி சிம்ஹா, கலையரசன், ரேஷ்மி மேனன் ஆகியோர் நடித்து இருந்தனர். அதனைத் தொடர்ந்து ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி தயாரித்த மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சுலர், மிரள், கள்வன் போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக மரகத நாணயம், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சுலர் போன்ற படங்கள் அதிக வசூல் செய்து சாதனை படைத்தது. ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து பல்வேறு கதைகளை கேட்டு, பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுக்கு அவர் முன்பணம் அளித்ததாகவும் கூறப்படுகிறது. ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் அடுத்ததாக வளையம் என்ற படம் வெளியாக இருந்தது. இந்த படத்தில் அவரது உறவினர் ஒருவரை நாயகனாக அறிமுகம் செய்ய இருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget