பெரியாறு புலிகள் சரணாலயத்தில் 231 வகையான பறவை இனங்கள் கண்டுபிடிப்பு
பெரியாறு புலிகள் சரணாலயத்தில் நடந்த கணக்கெடுப்பில் அரிய வகை உட்பட 231 வகையான பறவை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிக்கை.
கேரள மாநிலம் தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலயத்தில் நடந்த கணக்கெடுப்பில் அரிய வகை உட்பட 231 வகையான பறவை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
தேக்கடி பெரியாறு, பம்பா, அழுதா, வல்ல கடவு உள்ளிட்ட ஐந்து வனச்சரகங்களைக் கொண்டது பெரியாறு புலிகள் காப்பகம். 925 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு 2008, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. அதன் பின் இந்த ஆண்டு ஜனவரி 26 முதல் ஜனவரி 29 வரை சரணாலயம் பகுதியில் உள்ள 30 இடங்களில் முகாம் அமைத்து கணக்கெடுக்கும் பணி நடந்தது.
புல்லட்டின் சிவன், பார்வதி.. உத்தரமேரூர் ரைடு.. காஞ்சியில் மாஸாக மயான கொள்ளை திருவிழா..
சரணாலய இயக்குனர் பிரமோத் இணை இயக்குனர் பாட்டில் சுயோப் சுபாஸ், பறவை ஆராய்ச்சியாளர் பிரேம் சந்திப் ரகுமான், டாக்டர் அகமது நமீர் உடன் பறவை ஆராய்ச்சியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். குறித்து வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் பெரியாறு புலிகள் சரணாலயம் பறவைகள் வசிக்கும் வசதிகள் உள்ள வனப்பகுதியாகும்.இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருக்கும் தட்பவெப்ப நிலை இந்த வனப் பகுதியில் ஒரு கேள்வி உள்ளது,
JP Nadda: ”அதிமுக உட்பட அனைத்தும் குடும்பக் கட்சிகள்” - பாஜக தலைவர் ஜேபி நட்டா விமர்சனம்
இதனால் இமயமலையை ஒட்டி வாழும் பறவை இனங்களும் இங்கு வந்து வசிக்கும் நூறு ஆண்டுகளுக்கு முன் இங்கு பார்த்த காஷ்மீர் பூச்சி பிடிப்பான்( காஸ்மீர் பிளை கேட்சர்) என்ற அரிய வகை பறவை தற்போது கணக்கெடுப்பில் பார்க்கப்பட்டது. மேலும் இச்ச சரணாலயத்தில் மட்டும் பார்க்கக்கூடிய சோலை சிட்டு ( ஒயிட் பிளைட் சோலைக் கிளி) பழனி சிரிப்பான் ( பழனி லாவ்விங் திரஸ்) கருப்பு ஆரஞ்சு பூச்சி பிடிப்பான்(பிளாக் அண்ட் ஆரஞ்சு பிளை கேட்சர் உள்ளிட்ட 11 வகை பறவைகள் காணப்பட்டது. இதுவரை மொத்தம் 231 வகையான பறவைகள் இங்கு இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இவ்வாறு வனத்துறை பிடித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்