தேனி: தென் மேற்கு பருவமழை தீவிரம்.. முல்லை பெரியாறு அணையில் உயர்ந்து வரும் நீர் மட்ட அளவு..
முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது. ஜந்து மாவட்ட விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தில் உள்ள பல அணைகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் பல முக்கிய சுற்றுலா தலமாக அமைந்திருக்கும் ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்களுக்கு குளிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் மட்டுமின்றி சுமார் ஐந்து மாவட்டத்தின் நீர் ஆதாரமாக முல்லை பெரியாறு அணை அமைந்துள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் முல்லை பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீரின் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து நீர் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
MK Stalin Health: மேலும் சில நாட்கள் ஓய்வு.. முதல்வர் உடல்நலம் குறித்து மருத்துவமனையின் அறிக்கை!
நேற்று விநாடிக்கு 5258 கன அடியாக அணையின் நீர்வரத்து இருந்தது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 8143 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக திறக்கப்படும் தண்ணீரும் விநாடிக்கு 1722 கன அடியில் இருந்து 1789 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 133.20 அடியாகவும், நீர் இருப்பு 5446 மி.கன அடியாகவும் உள்ளது. பெரியாறு அணை பகுதியில் 84.6 மி.மீ மழையும் தேக்கடி பகுதியில் 31.2 மி.மீ மழை அளவும் மழை பதிவாகி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்