மேலும் அறிய

AIADMK Office Sealed: டிவியில் காமிச்சதுல 10% கூட உங்க வீடியோவுல இல்லை: அதிமுக வழக்கில் நீதிபதி அப்செட்...!

ஜூலை 11 ஆம் தேதி காலை 8:30 மணி முதல் என்ன நடந்தது என்பது குறித்து  நாளை மாலை அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு  நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டு வழக்கு  விசாரணையை இன்று (ஜூலை 15) ஒத்திவைத்தார்.

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கில் 2வது நாளாக இன்றும் தொடர்ந்து விசாரணையானது நடைபெற்று வருகிறது. 

கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்ட சூழலில் அன்றைய தினம்  ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் தலைமை கழகத்திற்கு தன்னுடைய ஆதரவாளர்களுடன்  சென்றார். அப்போது அங்கிருந்த இபிஎஸ் ஆதரவாளர்களுக்கும், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பும் கற்களை வீசியும், அங்கிருந்த வாகனங்களின் கண்ணாடியை உடைத்தும் மோதலில் ஈடுபட்டதால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. 

மோதலுக்கு பின் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் அதிமுக தலைமை அலுவலகம் வந்தது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் ஆதரவாளர்களை விரட்டியடித்தனர்.  அங்கிருந்த இபிஎஸ் படங்கள் கிழித்து தீ வைத்து எரிக்கப்பட்டன.அதனைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பின்னர் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய் துறையினர்  சீல் வைத்தனர். இதனிடையே அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி இபிஎஸ் -ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே முறையீடு செய்யப்பட்டது.  இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு தொடங்கியது. இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பின் அனல் பறக்கும் வாதம், அரசு தரப்பின் பதில்களை நீதிபதி கேட்டறிந்தார். 

பின் ஜூலை 11 ஆம் தேதி காலை 8:30 மணி முதல் என்ன நடந்தது என்பது குறித்த  அறிக்கை தாக்கல் செய்யுங்கள் என அரசு தரப்புக்கு  நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டு வழக்கு  விசாரணையை இன்றைக்கு (ஜூலை 15) ஒத்திவைத்தார். இதனைத் தொடர்ந்து 2வது நாளாக இன்று வழக்கின் விசாரணை தொடங்கியது. நீதிபதியின் பல கேள்விகளுக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலளித்தார். 

  • நீதிபதி: கட்சி அலுவலகத்துக்குள் இருப்பவர்கள் குறித்து போலீசாருக்கு தெரியுமா?
    அரசு தரப்பு : கட்சி அலுவலக மேலாளர் முதலில் ஜூலை 10 ஆம் தேதி அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றார். காலை, 6:30 மணிக்கு ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள் குவியத் தொடங்கினர். காலை 8 மணிக்கு தான் இபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டனர்.

          ==========================================

  • நீதிபதி: வன்முறையை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
    அரசு தரப்பு: நாங்கள் பலத்த பாதுகாப்பு போட்டிருந்தோம். காலை 8.45 மணியளவில் இரு தரப்புக்கும் இடையே தகராறு தொடங்கியது. நாங்கள் இரு தரப்பினரையும் தடுக்க முயன்றோம் ஆனால் அவர்கள் உள்ளே நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

(இதனைத் தொடர்ந்து நீதிபதி அதிமுக அலுவலகத்திற்கு முன்பு நடந்த வன்முறை சம்பவ வீடியோக்களை பார்வையிட்டார்)

         ==========================================

  • நீதிபதி: வன்முறை நடக்கும் போது போலீசார் பார்வையாளர்களாக உள்ளனர். நீங்கள் ஏன் காத்திருந்து அவர்களை அனுமதிக்கிறீர்கள்?
    அரசு தரப்பு: காவல்துறையின் தலையீடு இல்லாமல் போயிருந்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும். நாங்கள் அதை தடுத்தோம். பொதுமக்கள் யாருக்கும் இதில் காயம் ஏற்படவில்லை.இவ்வளவு நடந்தும் இரண்டு நபர்கள் மட்டுமே உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.

        நீதிபதி: போலீசார் தலையிட்டதாக தெரியவில்லை

(இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் காவல்துறை எவ்வாறு செயல்படத் தவறியது என்பதை இந்த வீடியோக்கள் காட்டும் என தெரிவித்தார். அதற்கு ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் எங்களிடமும் வீடியோவும் உள்ளது என கூறினார்)  

         ==========================================

  • நீதிபதி: இந்த வீடியோதான் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதா?

        அரசு தரப்பு: ஆம் 

        நீதிபதி: டிவி சேனல்களில் காட்டப்பட்டதில் 10% கூட போலீஸ் வீடியோவில் இல்லை. 

       அரசு தரப்பு: இனி கட்சி அலுவலகம் தொடர்பாக எந்த சர்ச்சையும் இருக்காது என்பதில் எந்த உறுதியும் இல்லை. நாங்கள் இதுவரை மூன்று எஃப்ஐஆர்களை பதிவு செய்துள்ளோம். முதல் FIR இல் குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்துள்ளோம். மேலும் சிசிடிவி அடிப்படையில், ஒவ்வொருவரையும், அவர்கள் யார், என்ன பதவி வகிக்கிறார்கள் என்பதை  இப்போது அடையாளம் கண்டுள்ளோம்.

   நீதிபதி: பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததற்காக அரசியல் கட்சிகளிடம் இருந்து எப்போதாவது நஷ்டஈடு அல்லது           இழப்பீடு வசூலித்திருக்கிறீர்களா?

   அரசு தரப்பு: நாங்கள் அதை செய்வோம். 22 லட்சம் மதிப்பிலான பொது சொத்துக்கள் சேதமடைந்துள்ளது.

   நீதிபதி: பொது சொத்தை சேதப்படுத்தியவர்ளிடம் இருந்தே இருந்தே இழப்பீடு பெற வேண்டும். ஓ.பி.எஸ் அல்லது இ.பி.எஸ் யார் தரப்பாக இருந்தாலும் இழப்பீடு வசூலிக்க வேண்டும். 

     ==========================================

ஓபிஎஸ் தரப்பு 

  • கட்சி அலுவலகத்தை வைத்திருக்கும் உரிமை யாருக்கு இல்லை. இரு தரப்பினருக்கும் இடையே உள்ள சர்ச்சையை நீதிமன்றத்தால் மட்டுமே தீர்க்க வேண்டும். அதுவரை கட்சி அலுவலகம் பூட்டியே இருக்க வேண்டும். 
  • பொதுக்குழு கூட்டத்தின் போது கட்சி அலுவலகத்திற்கு பூட்டு போடும் வழக்கம் இல்லை. ஏனென்றால் தமிழகம் முழுவதும் உள்ள கட்சியினர் வருவார்கள். நான் அங்கு உட்கார கட்சி அலுவலகத்திற்கு சென்றேன் ஆனால் நான்கு மாவட்ட செயலாளர்கள் வெளியே அமர்ந்து மக்களை அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தனர்.
  • அவர்கள் 200 முதல் 300 பேரை வைத்து, கட்சி அலுவலகத்தில் தடுப்புகளை வைத்து, அவர்கள் பக்கத்திலிருந்து கற்களை வீசினர். அவர்களின் காணொளிகளையும் எங்களின் காணொளிகளையும் பார்க்க வேண்டும்.நான் கட்சி அலுவலகத்திற்குள் நுழைய முடியாது என்று நீதிமன்றம் கூறவில்லை.
  • உச்ச நீதிமன்ற அவதானிப்புகளைக் கருத்தில் கொண்டு மட்டுமே தனி நீதிபதி பொதுக்குழு கூட்டத்தை அனுமதித்தார். தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளை மேல்முறையீட்டில் எடுத்துக் கொள்ளலாம்.

இதனைத் தொடர்ந்து  காவல்துறை அறிக்கைக்கு ஓபிஎஸ் தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் அளித்து வழக்கின் விசாரணையை திங்கட்கிழமைக்கு (ஜூலை 18) நீதிபதி சதீஷ்குமார் ஒத்திவைத்தார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Alanganallur Jallikattu 2026 LIVE: சீறும் காளைகள்.. அடக்க துடிக்கும் வீரர்கள்.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேரலை!
Alanganallur Jallikattu 2026 LIVE: சீறும் காளைகள்.. அடக்க துடிக்கும் வீரர்கள்.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேரலை!
Rs.2000 for TN Women: மகளிருக்கு ரூ.2,000, ஆண்களுக்கு இலவச பயணம்; வாக்குறுதிகளை அள்ளி வீசிய EPS; இன்னும் என்னென்ன.?
மகளிருக்கு ரூ.2,000, ஆண்களுக்கு இலவச பயணம்; வாக்குறுதிகளை அள்ளி வீசிய EPS; இன்னும் என்னென்ன.?
காளைகளை அடக்குங்க.. அரசு வேலையில் சேருங்க- ஜல்லிக்கட்டில் முதலமைச்சர் சூப்பர் அறிவிப்பு
காளைகளை அடக்குங்க.. அரசு வேலையில் சேருங்க- ஜல்லிக்கட்டில் முதலமைச்சர் சூப்பர் அறிவிப்பு
DMK CONGRESS TVK: தவெகவிற்கு பல்டியா.? டெல்லியில் திடீர் ட்விஸ்ட்- திமுகவிற்கு கெடு விதிக்க தயாராகும் ராகுல்.?
தவெகவிற்கு பல்டியா.? டெல்லியில் திடீர் ட்விஸ்ட்- திமுகவிற்கு கெடு விதிக்க தயாராகும் ராகுல்.?
ABP Premium

வீடியோ

ESCAPE ஆன விழா குழுவினர்
Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Alanganallur Jallikattu 2026 LIVE: சீறும் காளைகள்.. அடக்க துடிக்கும் வீரர்கள்.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேரலை!
Alanganallur Jallikattu 2026 LIVE: சீறும் காளைகள்.. அடக்க துடிக்கும் வீரர்கள்.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேரலை!
Rs.2000 for TN Women: மகளிருக்கு ரூ.2,000, ஆண்களுக்கு இலவச பயணம்; வாக்குறுதிகளை அள்ளி வீசிய EPS; இன்னும் என்னென்ன.?
மகளிருக்கு ரூ.2,000, ஆண்களுக்கு இலவச பயணம்; வாக்குறுதிகளை அள்ளி வீசிய EPS; இன்னும் என்னென்ன.?
காளைகளை அடக்குங்க.. அரசு வேலையில் சேருங்க- ஜல்லிக்கட்டில் முதலமைச்சர் சூப்பர் அறிவிப்பு
காளைகளை அடக்குங்க.. அரசு வேலையில் சேருங்க- ஜல்லிக்கட்டில் முதலமைச்சர் சூப்பர் அறிவிப்பு
DMK CONGRESS TVK: தவெகவிற்கு பல்டியா.? டெல்லியில் திடீர் ட்விஸ்ட்- திமுகவிற்கு கெடு விதிக்க தயாராகும் ராகுல்.?
தவெகவிற்கு பல்டியா.? டெல்லியில் திடீர் ட்விஸ்ட்- திமுகவிற்கு கெடு விதிக்க தயாராகும் ராகுல்.?
Gold And Silver Rate Today: மீண்டும் அதிகரித்த தங்கம், வெள்ளி விலை.! ஒரே நாளில் ரூ.4000 உயர்வு- நகைப்பிரியர்களுக்கு ஷாக்
மீண்டும் அதிகரித்த தங்கம், வெள்ளி விலை.! ஒரே நாளில் ரூ.4000 உயர்வு- நகைப்பிரியர்களுக்கு ஷாக்
Chennai Power Cut: சென்னையில திங்கட்கிழமை(19.01.2026) எந்தெந்த ஏரியால பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னையில திங்கட்கிழமை(19.01.2026) எந்தெந்த ஏரியால பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Top 10 News Headlines: தங்கம், வெள்ளி விலை உயர்வு, MGR பிறந்த நாள்-மோடி பதிவு, ட்ரம்ப் வரி மிரட்டல் - 11 மணி செய்திகள்
தங்கம், வெள்ளி விலை உயர்வு, MGR பிறந்த நாள்-மோடி பதிவு, ட்ரம்ப் வரி மிரட்டல் - 11 மணி செய்திகள்
TTV Dhinakaran Alliance: தலைமறைவான டிடிவி.! 15 நாட்களில் நடந்த திடீர் திருப்பம்- இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
தலைமறைவான டிடிவி.! 15 நாட்களில் நடந்த திடீர் திருப்பம்- இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
Embed widget