மேலும் அறிய

கண்முன்னே விபத்தில் இறந்த மச்சான்.. மின்சார வயரை பிடித்து உயிரை விட்ட இளைஞர் - தேனியில் சோகம்

தனது கண்முன்னே மைத்துனர் விபத்தில் உயிர் இழந்த சோகம் தாங்க முடியாமல் வாலிபர் மின்கம்பம் மீது ஏறி மின்சார வயரை பிடித்து உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தமபாளைம் அருகே சாலை விபத்தில் மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி கண்முன்னே மைத்துனர் இறந்த துக்கம் தாங்க முடியாமல்  மின்கம்பம் மீது ஏறி உயர் அழுத்த மின் வயரினை (HD) பிடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TN Rains: மதியம் 1 மணி வரை! 7 மாவட்ட மக்கள் குடையுடன் வெளியில் போங்க - உங்க ஊருல எப்படி?

கண்முன்னே விபத்தில் இறந்த மச்சான்.. மின்சார வயரை பிடித்து உயிரை விட்ட இளைஞர் - தேனியில் சோகம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம்  பாறை மேட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் சார்பு ஆய்வாளரான இவருக்கு இரண்டு மகன்களான ஷாம் நிஜாந்த் மற்றும் ஷாம் வேதன் உள்ளனர். இவர்கள் இருவரும் அதே பகுதியில் வசிக்கும்  தங்களது மாமா நாகராஜ் என்பவரின் மகன் ஆனந்தராஜ் ஆகிய மூன்று பேரும் இரண்டு இரு சக்கர வாகனத்தில் கோம்பையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.அவர்களது உறவினரை பார்த்து விட்டு கோம்பையில் இருந்து உத்தமபாளையத்திற்கு வரும் மாநில நெடுஞ்சாலையில் மூன்று பேரும் இரண்டு இரு சக்கர வாகனத்தில் முன் பின்னாக வந்துள்ளனர்.

LIVE | Kerala Lottery Result Today (11.09.2024): கேரளா லாட்டரி Fifty Fifty FF 110.. 1 கோடி பம்பர் முதல் பரிசு! வெல்லப்போகும் அதிர்ஷ்டசாலி யார்?

கண்முன்னே விபத்தில் இறந்த மச்சான்.. மின்சார வயரை பிடித்து உயிரை விட்ட இளைஞர் - தேனியில் சோகம்

அப்போது கருக்கோடை எனும் இடத்தில் வரும்பொழுது ஷாம் நிஜாந்த் ஓட்டி வந்த இருசக்கர வாகனம்  சாலையின் ஓரம் இருந்த புளிய மரத்தில் எதிர்பாராமல் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஷாம் நிஷாந்த் உயிர் இழந்துள்ளார். பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அவரது மாமா ஆனந்தராஜ் மற்றும் அவரது தம்பி ஷாம் நிவேதன் ஆகியோர் விபத்து குறித்து உறவினர்களுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற உறவினர்களும் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

தங்கச்சி கல்யாணத்திற்காக கஞ்சா கடத்திய அண்ணன்! போலீசில் சிக்கியது எப்படி?

கண்முன்னே விபத்தில் இறந்த மச்சான்.. மின்சார வயரை பிடித்து உயிரை விட்ட இளைஞர் - தேனியில் சோகம்

இந்நிலையில் சம்பவ இடத்தில் பெரும் சோகத்தில் அமர்ந்து இருந்த ஆனந்தராஜ் தனது கண்முன்னே இருசக்கர வாகன விபத்தில் மைத்துனர் உயிர் இழந்த துக்கம் தாங்க முடியாமல் அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது ஏறி உயர் மின் அழுத்த வயரினை கையில் பிடித்துள்ளார். அப்போது அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியதில் சம்பவ இடத்திலேயே அவரும் உயிரிழந்துள்ளார்.

அதிமுகவை தொடர்ந்து விஜய்க்கும் அழைப்பு விடுத்த திருமாவளவன் - தமிழக அரசியலில் நடப்பது என்ன?

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது பிரேதத்தையும் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் தனது கண்முன்னே வந்த மைத்துனர் விபத்தில் உயிர் இழந்த சோகம் தாங்க முடியாமல் வாலிபர் மின்கம்பம் மீது ஏறி மின்சார வயரை பிடித்து உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Suicidal Trigger Warning..

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்க்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி

எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Varunkumar IPS : ’ஆபரேஷன் TVK – சென்னை வரும் வருண்குமார்’ இதுதான் அசைண்மெண்டா..?
’ஆபரேஷன் TVK – சென்னை வரும் வருண்குமார்’ இதுதான் அசைண்மெண்டா..?
TVK Vijay: “வாகை சூடும் வரலாறு திரும்பட்டும்“ - தவெகவின் 2-வது மாநில மாநாட்டு தேதியை அறிவித்த விஜய்
“வாகை சூடும் வரலாறு திரும்பட்டும்“ - தவெகவின் 2-வது மாநில மாநாட்டு தேதியை அறிவித்த விஜய்
Tesla Model Y: பெயிண்டுக்கே புல்லட் விலை, முழு செல்ஃப் ட்ரைவிங்கிற்கு தனி கார் விலை - டெஸ்லா மாடல் Y தேறுமா?
Tesla Model Y: பெயிண்டுக்கே புல்லட் விலை, முழு செல்ஃப் ட்ரைவிங்கிற்கு தனி கார் விலை - டெஸ்லா மாடல் Y தேறுமா?
TVK Flag Issue: என்னடா இது தவெக-விற்கு வந்த சோதனை.!! கட்சிக் கொடிக்கு தொடரும் சிக்கல் - நீதிமன்றத்தில் புதிய வழக்கு
என்னடா இது தவெக-விற்கு வந்த சோதனை.!! கட்சிக் கொடிக்கு தொடரும் சிக்கல் - நீதிமன்றத்தில் புதிய வழக்கு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி
O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா
Anbumani Vs Ramadoss | பாஜக கூட்டணியில் அன்புமணி.. ரூட்டை மாற்றும் ராமதாஸ் பக்கா ஸ்கெட்ச்!
Nainar Nagendran | ”சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்” அதிர்ச்சியில் உறைந்த  நயினார் நாகேந்திரன்
மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Varunkumar IPS : ’ஆபரேஷன் TVK – சென்னை வரும் வருண்குமார்’ இதுதான் அசைண்மெண்டா..?
’ஆபரேஷன் TVK – சென்னை வரும் வருண்குமார்’ இதுதான் அசைண்மெண்டா..?
TVK Vijay: “வாகை சூடும் வரலாறு திரும்பட்டும்“ - தவெகவின் 2-வது மாநில மாநாட்டு தேதியை அறிவித்த விஜய்
“வாகை சூடும் வரலாறு திரும்பட்டும்“ - தவெகவின் 2-வது மாநில மாநாட்டு தேதியை அறிவித்த விஜய்
Tesla Model Y: பெயிண்டுக்கே புல்லட் விலை, முழு செல்ஃப் ட்ரைவிங்கிற்கு தனி கார் விலை - டெஸ்லா மாடல் Y தேறுமா?
Tesla Model Y: பெயிண்டுக்கே புல்லட் விலை, முழு செல்ஃப் ட்ரைவிங்கிற்கு தனி கார் விலை - டெஸ்லா மாடல் Y தேறுமா?
TVK Flag Issue: என்னடா இது தவெக-விற்கு வந்த சோதனை.!! கட்சிக் கொடிக்கு தொடரும் சிக்கல் - நீதிமன்றத்தில் புதிய வழக்கு
என்னடா இது தவெக-விற்கு வந்த சோதனை.!! கட்சிக் கொடிக்கு தொடரும் சிக்கல் - நீதிமன்றத்தில் புதிய வழக்கு
Top 10 News Headlines: ஆட்சியில் பங்கு-அன்புமணி அதிரடி, இன்றும் குறைந்த தங்கம் விலை, ட்ரம்ப் சொன்ன நல்ல தகவல் - 11 மணி செய்திகள்
ஆட்சியில் பங்கு-அன்புமணி அதிரடி, இன்றும் குறைந்த தங்கம் விலை, ட்ரம்ப் சொன்ன நல்ல தகவல் - 11 மணி செய்திகள்
Hybrid Midsize SUV: இப்பவே ரோட்ல இந்த 4 எஸ்யுவி தான் அதிகம் ஓடுது.. இதுல ஹைப்ரிட் இன்ஜின் அப்கிரேடும் வருதாம், எந்த கார்கள்?
Hybrid Midsize SUV: இப்பவே ரோட்ல இந்த 4 எஸ்யுவி தான் அதிகம் ஓடுது.. இதுல ஹைப்ரிட் இன்ஜின் அப்கிரேடும் வருதாம், எந்த கார்கள்?
TN weather Reoprt: ரெடியா? ஒரு வாரத்திற்கு வெளுக்கப் போகும் கனமழை, எங்கெல்லாம் ரெட் அலெர்ட்? வானிலை அறிக்கை
TN weather Reoprt: ரெடியா? ஒரு வாரத்திற்கு வெளுக்கப் போகும் கனமழை, எங்கெல்லாம் ரெட் அலெர்ட்? வானிலை அறிக்கை
Anbumani Statement: ‘ஆட்சி அதிகாரத்தில் உரிமை‘; களமிறங்கிய அன்புமணி - என்ன சொல்லி இருக்கார் பாருங்க
‘ஆட்சி அதிகாரத்தில் உரிமை‘; களமிறங்கிய அன்புமணி - என்ன சொல்லி இருக்கார் பாருங்க
Embed widget