மேலும் அறிய

100 மரக்கன்றுகளை 20 நாட்களில் நடவேண்டும் - மரங்களை வெட்டிய ஊராட்சிக்கு நீதிமன்றம் நச் உத்தரவு...!

''மின்சார வழித்தடத்திற்கு இடையூறு என ஊராட்சி நிர்வாகம் கிளைகளை மட்டுமே வெட்ட அனுமதி அளித்த நிலையில், நாவல், வாகை, வேம்பு, அரச மரங்கள் என ஐந்து மரங்கள் வெட்டப்பட்டன''

பொதுநல நோக்கத்தில் ஐடி ஊழியர் நட்டு பராமரித்து வந்த மரங்களில், அவசியமின்றி ஐந்து மரங்களை வெட்டிய ஊராட்சி நிர்வாகம், பயன்தரக் கூடிய 100 மரக்கன்றுகளை 30 நாட்களுக்குள் நட்டு தொடர்ந்து பராமரிக்க வேண்டும். என தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மக்களில் பலருக்கும் மரம் நட வேண்டும் என்ற ஆசை இருக்கும், ஆனால் எங்கு நடுவது அதை எப்படி பராமரிப்பது என்று தெரியாமல் இருப்பர். இப்படி மரம் நடவு செய்ய விரும்பும் மர ஆர்வலர்கள் சொந்தமாக நிலம் இல்லாவிட்டாலும், அவர்கள் தங்களுக்கு உகந்த இடத்தில் மரம் நடும், அதனை பராமரித்து வருவர். அப்படி மரம் நட்டு, அதனைத் தொடர்ந்து  பராமரித்து வருபவர்களுக்கு அதன் கடுமை பற்றி தெரியும். தேனி மாவட்டத்தில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் நபர் மரம் வளர்க்கும் ஆர்வத்தில் நட்டுவைத்த மரத்தை தேவையின்றி வெட்டிய ஊராட்சி நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்து அதிலும் வெற்றி பெற்றுள்ளார் அந்த நபர். 

100 மரக்கன்றுகளை 20 நாட்களில் நடவேண்டும் - மரங்களை வெட்டிய ஊராட்சிக்கு நீதிமன்றம் நச் உத்தரவு...!

தேனி மாவட்டம் ஸ்ரீ ரெங்காபுரம் பள்ளித் தெருவை சேர்ந்தவர் 29 வயதாகும் சதீஷ்குமார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியர் ஆக பணிபுரிகிறார். தற்போது கொரோனா பரவல் காரணமாக வீட்டில் இருந்து பணி செய்து வருகிறார். இவர் தன் நண்பர்கள் 40 பேருடன் இணைந்து 2009ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் அன்று ஊராட்சியின் மைதானப் பகுதியில் 22 மரக்கன்றுகளை நட்டு பராமரித்தார். இந்த மரங்கள் செழிப்பாக வளர்ந்தன.

100 மரக்கன்றுகளை 20 நாட்களில் நடவேண்டும் - மரங்களை வெட்டிய ஊராட்சிக்கு நீதிமன்றம் நச் உத்தரவு...!

இந்நிலையில் ஜூலை 8ஆம் தேதி மின்சார வழித்தடத்திற்கு இடையூறு என, ஊராட்சி நிர்வாகம் கிளைகளை மட்டுமே வெட்ட அனுமதி அளித்த நிலையில், ஊராட்சி கூடுதல் கட்டடத்தில் இருந்து ஊராட்சி அலுவலகத்திற்கு செல்லும் ரோட்டில் நாவல், வாகை, வேம்பு, அரச மரங்கள் என ஐந்து மரங்கள் வெட்டப்பட்டன. இது குறித்து சதீஷ் குமார் ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டதற்கு முறையான பதில் இல்லை. இதனால் இவர் ஜூலை 12ஆம் தேதி  தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு 'ஆன்லைனில்' புகார் அனுப்பினார். இது குறித்து  வீரபாண்டி ஸ்டேஷனில் கடந்த ஜூலை 13ஆம் தேதியன்று விசாரணை நடந்து. ஆனால் இதற்கு முழுமையான தீர்வு காணப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஜூலை 15ஆம் தேதி தேனி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் சதீஷ்குமார். 

100 மரக்கன்றுகளை 20 நாட்களில் நடவேண்டும் - மரங்களை வெட்டிய ஊராட்சிக்கு நீதிமன்றம் நச் உத்தரவு...!

மக்கள் நீதிமன்ற நிரந்தர தீர்ப்பாயம், ஸ்ரீரெங்கபுரம் ஊராட்சித் தலைவர் பெருமாள், எழுத்தர் சுருளி, தேனி உதவி மின் பொறியாளர் புனிதபத்பநாபன், தாடிச்சேரி வி.ஏ.ஓ., ராமச்சந்திரன், நேரில் விளக்கம் அளிக்க 'சம்மன்' அனுப்பியது. மேலும்  தொடர் விசாரணை நிரந்தர மக்கள் நீதிமன்ற வளாகத்தில் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடந்தது. விசாரணையின் முடிவில், நீதிபதி முகமது ஜியாவுதீன், "அவசியம் இன்றி மரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டும். "வெட்டப்பட்ட ஐந்து மரங்களுக்கு ஈடாக ஊராட்சி நிர்வாகம், 100 மரக்கன்றுகளை ஒரு மாதத்திற்குள் நட்டு பராமரிக்க வேண்டும். அதனை வி.ஏ.ஓ. உறுதிப்படுத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்," என, தீர்ப்பளித்தார்.

தேவை இன்றி மரங்கள் வெட்டப்படுவதை தடுப்பதற்காக சமூக ஆர்வலர் எடுத்த நடவடிக்கையின் மூலம், ஊராட்சி நிர்வாகம் 100 மரக்கன்றுகளை நட வைத்த சம்பவம் அப்பகுதி இயற்கை ஆர்வலர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget