அய்யம்பட்டியில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி - தயாராகி வரும் வாடிவாசல்
சின்னமனூர் அருகே நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்காக தயாராகி வரும் வாடிவாசல் 700 மாடுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சின்னமனூர் அருகே எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று அய்யம்பட்டி ஜல்லிக்கட்டுக்காக தயாராகி வரும் வாடிவாசல் 700 மாடுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாளை போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தேனி மாவட்டத்தில் பிரசித்துப் பெற்று விளங்கும் ஜல்லிக்கட்டு விழாவானது, அய்யம்பட்டி மற்றும் பல்லவராயன்பட்டியில் வெகு விமரிசையாக நடைபெறும். இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தில் ஏழைகாத்த அம்மன் வல்லடி கருப்பசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை (18.02.2024) ஞாயிற்றுக்கிழமை வெகு நடைபெற உள்ளது.
40 years of Vijay: குழந்தை நட்சத்திரம் முதல் தளபதி வரை! 40 ஆண்டுகளை நிறைவு செய்த விஜய்!
இதற்காக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் தயாராகி வரும் வாடிவாசல் அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பார்வைக்காக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டும் ஜல்லிக்கட்டு காளைகள் முறையாக மருத்துவ பரிசோதனை செய்து வாடிவாசல் வழியாக களம் இறக்கப்பட்டு வெகு விமரிசையாக நடைபெற விழா கமிட்டியின் சார்பாகவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் ஏற்பாடுகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது மாடுகள் பதிவதற்கு ஆன்லைன் மூலமாக தற்போது வரை 800 மாடுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.