மேலும் அறிய

”ஆனா நீ படிக்கணும் தங்கம்” : தைரியம் கொடுத்த தாய்.. தந்தை உயிரிழந்த அன்றே தேர்வெழுத வந்த +2 மாணவி..

உடல்நலக்குறைவால் மரணம் அடைந்த தந்தையின் உடல் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த நிலையிலும், பிளஸ்-2 மாணவி தேர்வு எழுதிவிட்டு வந்து இறுதிச்சடங்கு செய்த உருக்கமான நிகழ்வு பரமக்குடியில் நடந்துள்ளது. 

உடல்நலக்குறைவால் மரணம் அடைந்த தந்தையின் உடல் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த நிலையிலும், பிளஸ்-2 மாணவி நேற்று தேர்வு எழுதிவிட்டு வந்து தந்தையின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்த உருக்கமான நிகழ்வு பரமக்குடியில் நடந்துள்ளது. 

உடல்நலக்குறைவால் மரணம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜப்பட்டினத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி பவானி. இவர்களது ஒரே மகள் சுரேகா(வயது 17). இவர் பரமக்குடியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார். மாணவி சுரேகாவின் தந்தை ரவிச்சந்திரன் சலூன் கடை வைத்து தொழில் நடத்தி வந்தார். 

                                                                 ”ஆனா நீ படிக்கணும் தங்கம்” : தைரியம் கொடுத்த தாய்.. தந்தை உயிரிழந்த அன்றே தேர்வெழுத வந்த +2 மாணவி..

கடந்த ஒரு மாதமாக அவர் உடல்நலக்குறைவால் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்  நேற்று முன்தினம் இறந்துவிட்டார். இதனால் அவரது மனைவியும், மகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரது உடலை பெற்று கொண்ட குடும்பத்தினர் இறுதி சடங்கு செய்வதற்காக நேற்று வீட்டில் வைத்தனர்.

 உறவினர்கள் அஞ்சலி

மாணவி சுரேகாவும், அவரது தாயாரும் ரவிச்சந்திரன் உடல் அருகே அழுது கொண்டிருந்தார்கள்.ஒருபுறம் தந்தை இறந்த துக்கம், இன்னொரு புறம் நேற்றைய வணிகவியல் தேர்வு. என்ன செய்வது என தெரியாமல் மாணவி சுரேகா தவித்தார். சுரேகாவிடம் அவருடைய தாயார் பவானி, “நடந்தது நடந்து விட்டது. அப்பா இறந்து விட்டார். அவர் ஆசைப்படி நீ படித்து பெரிய ஆளாக வர வேண்டும். அப்பா சொன்னது போல் அரசு வேலை பார்க்க வேண்டும். நீ கட்டாயம் இன்று (அதாவது நேற்று) தேர்வை எழுத வேண்டும்” என்று தைரியம் சொல்லியிருக்கிறார். 

தந்தையின் ஆசையை நிறைவேற்ற தன் மனதை திடப்படுத்தி கொண்ட சுரேகா நேற்று பிளஸ்-2 தேர்வு எழுத பள்ளிக்கு சென்றார். முன்னதாக மாணவி சுரேகா தேர்வு எழுத வரமாட்டார் என சகமாணவிகள், ஆசிரியர்கள் நினைத்து இருந்த நிலையில், திடீரென்று அங்கு வந்த மாணவி சுரேகா அங்கு வந்தார். உடனே அவரைப் பார்த்த சக தோழிகள் மற்றும் ஆசிரியைகள் அவரது  கையை பிடித்து அவருக்கு ஆறுதல் கூறினார்கள்.

அதன் பின்னர் மாணவி சுரேகா வணிகவியல் தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பினார். மாணவி வீடு திரும்பும் வரை காத்திருந்த உறவினர்கள் அதன் பிறகு இறுதி சடங்கு நடத்தினர். தந்தை உடலுக்கு இறுதிச்சடங்கு செய்துவிட்டு, மாணவி கதறி அழுதது அங்கிருந்த உறவினர்களின் கண்களை குளமாக்கியது. 

தலைப்பு செய்திகள்

ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Vaigai Selvan on ADMK EPS: ''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Embed widget