மேலும் அறிய
Advertisement
Chithirai Festival : கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளுவதற்காக வைகை ஆற்றில் தண்ணீர் வருவதை பூத்தூவி வரவேற்ற பொதுமக்கள்..
மதுரையில் கள்ளழகர் சித்திரை திருவிழா கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளுவதற்காக வைகை அணையில் திறக்கப்பட்ட நீர் மதுரை வந்தடைந்தது - பூத்தூவி வரவேற்ற பொதுமக்கள்.
மதுரை மாவட்டம் அழகர்கோயில் கள்ளழகர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நாளை கள்ளழகர் புறப்பாடு நடைபெற்று நாளை மறுநாள் கள்ளழகர் எதிர்சேவை நடைபெற்ற பின்னர் 5ஆம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
மதுரையில் கள்ளழகர் சித்திரை திருவிழா கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளுவதற்காக வைகை அணையில் திறக்கப்பட்ட நீர் மதுரை வந்தடைந்தது - பூத்தூவி வரவேற்ற பொதுமக்கள்.#madura | @abpnadu | @JeeVaigai | @SRajaJourno | @LPRABHAKARANPR3 | #சித்திரை_திருவிழா2023 #Chithiraithiruvizha #abplive pic.twitter.com/pKm6QomAZx
— arunchinna (@arunreporter92) May 2, 2023
இந்நிலையில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்விற்காக தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து கடந்த 30 ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து 30 ஆம்தேதி முதல் இன்றுவரை 750கன அடி நீரும், நாளை முதல் 5 ஆம் தேதி வரை 500 கன அடி நீரும் திறக்கப்படவுள்ள நிலையில் இன்று திறக்கப்பட்ட நீரானது மதுரை மாநகரில் கள்ளழகர் எழுந்தருளும் பகுதிக்கு வந்தடைந்த நிலையில் குண்டோதரன் வேடம் அணிந்து வைகை அன்னையை வரவேற்கும் விதமாக மலர் தூவியும் வைகை ஆற்றை போற்றி வைகை நதி ஆரத்தி பாடல் பாடியும் ஏராளமான பொதுமக்கள் வரவேற்றனர்.
முன்னதாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான தீர்த்த கிணற்றிலிருந்து புனித நீரை எடுத்து வைகை ஆற்றில் தெளித்தும், சிறப்பு பூஜைகள் மற்றும் தீப ஆராதனை செய்து நீரை வரவேற்றனர். இதில் வைகை நதி மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், சமுக ஆர்வலர்கள், பெண்கள், சிறுமிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Meenatchi Kalyanam: மதுரை அரசி மீனாட்சிக்கு திருக்கல்யாணம்! கொண்டாட்டத்தில் மதுரை மக்கள்.. 3000 போலீசார் குவிப்பு..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் செய்திகள் படிக்க - ”மணல் மாஃபியா கும்பலை கட்டுப்படுத்துவதற்கு சிறப்புப் படை அமைக்க வேண்டும்” - தொல்.திருமா வேண்டுகோள் !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
அரசியல்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion