மேலும் அறிய

Meenatchi Kalyanam: மதுரை அரசி மீனாட்சிக்கு திருக்கல்யாணம்! கொண்டாட்டத்தில் மதுரை மக்கள்.. 3000 போலீசார் குவிப்பு..

மதுரையின் அரசி என அழைக்கப்படும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் கோலகலமாக நடைபெற்று வருகின்றது.

பண்பாட்டின் தலைநகரம் மதுரையில் திருவிழாக்களின் திருவிழாவான சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 23 அன்று மீனாட்சி அம்மன் கோவிலின் கொடியேற்றத்துடன் துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

சித்திரை விழாவின் முற்பகுதியில் 12 நாட்கள் நடைபெறும் மீனாட்சி அம்மன் கோயில் நிகழ்வுகளின் மைய விழாவான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது. மதுரையின் அரசி மீனாட்சிக்கும் அவளது நாயகன் சுந்தரேசுவரருக்கும் இன்று காலை திருக்கல்யாணம் (8:35 மணி முதல் 8:59 மணிக்குள்) நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் மதுரையின் அரசியாக முடி சூடிய மீனாட்சி, தேவர்களை போரில் வென்று, நேற்று சுந்தரேசுவரரிடம் போர் புரிந்தார். இந்த நிகழ்ச்சி  திக்கு விஜயம் என அழைக்கப்படும். அதனை தொடர்ந்து இன்று திருக்கல்யாணமும், நாளை தேரோட்டமும் நடைபெறுகிறது.

கோயிலின் உள்ளே வடக்கு ஆடி, மேல ஆடி சந்திப்பில் உள்ள கல்யாண மேடை வெட்டிவேர்கள் மற்றும் வண்ணப்பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருக்கல்யாண மேடையில் பவளக்கனிவாய் பெருமாளும், சுப்பிரமணியசுவாமி  தெய்வானையுடனும் மணமேடையில் எழுந்தருளினர். தொடர்ந்து மீனாட்சியம்மனும் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும் மணக்கோலத்தில் மேடையில் எழுந்தருளினார்.

8:35 மணிக்கு மீனாட்சியம்மன் சார்பிலும், சுந்தரேசுவரர் சார்பிலும் பிரதிநிதிகளாக இருந்து சிவாச்சாரியார்கள் மாலைமாற்றும் வைபவம் நடைபெற்றது. இதனையடுத்து சுவாமிக்கும் அம்மனுக்கும் பட்டு சாத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்று வேதமந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் முழங்க மங்கலநாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சுவாமிக்கு மாங்கல்யம் அணிவிக்கும் அதே கணத்தில் கோவிலின் உள்ளேயும், வெளியேயும் கூடியுள்ள பல்லாயிரக்கணக்கான பெண் பக்தர்களும் தங்களது மாங்கல்யத்தை புதுப்பித்துகொள்கின்றனர்.

திருக்கல்யாணத்தில் பங்கேற்க 1 லட்சம் பக்தர்களுக்கு மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மெகா விருந்து நடைபெறுகிறது.  இந்த விருந்தின்போது சாப்பிட்ட கையோடு பக்தர்கள் திருக்கோயில் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மொய்ப்பந்தலில், திருக்கல்யாண மொய் எழுதி, பிரசாதம் பெற்றுக்கொள்வார்கள். விழாவை கட்டணம் இல்லாமல் தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்கு தெற்கு கோபுரம் வழியாக முதலில் வருவோர் முன்னுரிமை அடிப்படையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

ரூ.500 கட்டணச் சீட்டு வைத்திருப்போர் வடக்கு கோபுரம் அருகேயுள்ள முனீஸ்வரர் சன்னதி அருகில் உள்ள வழியிலும், ரூ.200 கட்டணச்சீட்டு வைத்திருப்போர் வடக்கு சித்திரை வீதி வழி வந்து வடக்கு கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

திருக்கல்யாண விழாவை முன்னிட்டு 3 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்களும் மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

CM Stalin: ‘பிடிஆர் ஆடியோ விவகாரம் மட்டமான அரசியல்’ .. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்..

Meenakshi Kalyanam : 7500 கிலோ அரிசி.. 6 டன் காய்கறிகள்.. லட்சம் பேருக்கு விருந்து.. மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண விழா..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Embed widget