மேலும் அறிய
போலீசார் சட்டத்திற்கும், மனசாட்சிக்கும் உட்பட்டு செயல்பட வேண்டும் - டிஜிபி சைலேந்திர பாபு
தவறு செய்யாமலேயே சில நேரங்களில் காவல்துறையினர் மீது புகார் வருகின்றன. தமிழ்நாடு காவல்துறை பாரம்பரிய மிக்க காவல்துறை.
![போலீசார் சட்டத்திற்கும், மனசாட்சிக்கும் உட்பட்டு செயல்பட வேண்டும் - டிஜிபி சைலேந்திர பாபு The police must act within the law and conscience dgp sylendra babu போலீசார் சட்டத்திற்கும், மனசாட்சிக்கும் உட்பட்டு செயல்பட வேண்டும் - டிஜிபி சைலேந்திர பாபு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/02/cd5005607427c9964a156606a9c67cbf_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டிஜிபி சைலேந்திர பாபு
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் டாக்டர் சி.சைலேந்திரபாபு மதுரை தெப்பக்குளம் தியாகராஜர் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் டாக்டர் சி.சைலேந்திரபாபு மதுரை தெப்பக்குளம் தியாகராஜர் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில்.@tnpoliceoffl | @SRajaJourno | #tndgp | #sylendrababu | #Police | #Madurai pic.twitter.com/YxAQu6daTS
— Arunchinna (@iamarunchinna) July 2, 2022
அப்போது பேசிய அவர், “கடந்த 10 ஆண்டுகளில் 80 காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்து உள்ளன. இதில் 2018ல் அதிகமாக 18 காவல் மரணங்கள் நிகழ்ந்து உள்ளன. 2021ல் 4, 2022ல் 2 காவல் நிலைய மரணங்கள் மட்டுமே நடைபெற்று உள்ளன. தமிழக முதல்வர் காவல்நிலைய மரணங்கள் இருக்கக் கூடாது. அதனை நடைமுறை படுத்தக் காவல்துறையினர் செயல்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் 80 காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்து உள்ளன.
— Thangadurai (@thangadurai887) July 2, 2022
இதில் அதிகபட்சமாக 2018ல் 18 காவல்நிலைய மரணங்கள், 2021ல் 4 காவல் நிலைய மரணங்களும் இந்த ஆண்டு 2 மரணம் மட்டுமே நிகழந்து உள்ளன.
_சைலேந்திர பாபு
தமிழ்நாடு காவல்துறை தலைவர்.@vetridhaasan @iamarunchinna
தவறு செய்யாமலேயே சில நேரங்களில் காவல்துறையினர் மீது புகார் வருகின்றன. சிலர் உடல்நலக் குறைவுகள், தற்கொலை செய்து கொள்வர். ஆனால் அது காவல்துறை மீதான குற்றம்சாட்டாக கூறப்படும். தமிழ்நாடு காவல்துறை பாரம்பரிய மிக்க காவல்துறை.
![போலீசார் சட்டத்திற்கும், மனசாட்சிக்கும் உட்பட்டு செயல்பட வேண்டும் - டிஜிபி சைலேந்திர பாபு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/02/684f4beb5e454508a53899a173dc8c8a_original.jpg)
யாரையும் துன்புறுத்த மாட்டார்கள். அங்கொன்றும் இங்கொன்று நிகழும். அதையும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம். காவல்துறை அரசாங்கத்தின் அங்கம், சட்டத்தின் பார்வையில் இருக்கிறது. சட்டத்திற்கும், மனசாட்சிக்கு உட்பட்டு, காவல் கோட்டுபாட்டுக்கு உட்பட்டு காவல்துறை செயல்பட வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion