மேலும் அறிய
Advertisement
இடி தாக்கியதில் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து, பிளம்பர் உயிரிழப்பு..
’பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்’ : இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை அருகே இடி தாக்கியதில் ட்ரவுசர் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து பிளம்பர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#சிவகங்கை அருகே இடி தாக்கியதில் டவுசர் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து பிளம்பர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
— Arunchinna (@iamarunchinna) May 2, 2022
Further reports to follow - @abpnadu •| #death | #ACCIDENT
| #thunderstruck | #sivagangai | #TamilNadu | #Ambulance |•• pic.twitter.com/Pmp7rdiCHf
சிவகங்கையை அடுத்துள்ள காஞ்சிரங்கால் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி இவரது மனைவி தனபாக்கியம். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ள நிலையில் பாண்டி பிளம்பர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை அவர் மூலிகை செடிகள் பறிப்பதற்காக தனது கிராமத்தின் அருகே உள்ள மைதானத்திற்கு சென்றுள்ளார். இவர் தனது செல்போனை எப்பொழுதுமே வேஷ்டியின் உள்ளே ட்ரவுசர் பாக்கெட்டில் வைப்பது வழக்கமாக கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் திடீரென அவர் மீது இடி தாக்கியுள்ளது. இதில் அவரது ட்ரவுசர் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சம்பவ இடத்திலேயே கீழே விழுந்துள்ளார்.
’ இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் ‘ - Maharshi Charak Shapath Oath : ’சமஸ்கிருத உறுதி மொழி வாசித்தது எனக்கே தெரியாது’ எந்த விளக்கமும் கேட்காமல் நடவடிக்கை எடுத்துவிட்டர்கள்..! – மதுரை மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல் பேட்டி
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறைக்கு தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த 108 ஊழியர்கள் அவர் இறந்ததாக தெரிவிக்கவே அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் காவல்துறையினர் மற்றும் தாசில்தார் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மழை நேரங்களில் செல்ஃபோனை பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும், அந்த சமயத்தில் செல்போனை ஸ்விட் ஆப் செய்வதே சிறந்த வழிமுறை என காவல்துறையினர் எச்சரித்தார்.
’ மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் ‘ - தமிழ்நாட்டில் நிலவும் மத நல்லிணக்கத்தை ஒரு சதவீதம் கூட அசைக்க முடியாது - இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் குல்லா அணிந்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion