மேலும் அறிய

’சமஸ்கிருத உறுதிமொழி வாசித்தது எனக்கே தெரியாது’ – மதுரை மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல் பேட்டி

’மொத்த உறுதிமொழியும் சமஸ்கிருதத்தில் வாசித்ததாக தவறாக புரிந்துக்கொண்டு என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. என்னிடம் வாய் மொழியாக கூட எந்த விளக்கமும் கேட்கப்படவில்லை’

மதுரை மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழாவில் தேசிய மருத்துவ கமிஷன் பரிந்துரைத்த, ‘மகரிஷி சரக் சபத்’ என்ற சமஸ்கிருத வாக்கிய உறுதிமொழியை மாணவர்கள் எடுத்ததால், மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ரத்தினவேல் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன் தினம் மதுரை மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, ஆட்சியர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், 2018ஆம் ஆண்டு மாணவர்கள் நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.  இந்நிலையில், பாரம்பரிய ஹிப்போகிராடிக் உறுதிமொழிக்கு பதிலாக, இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட சமஸ்கிருத வார்த்தைகள் கொண்ட உறுதிமொழியை ஆங்கிலத்தில் மாணவர்கள் எடுத்துள்ளனர்.

’சமஸ்கிருத உறுதிமொழி வாசித்தது எனக்கே தெரியாது’  – மதுரை மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல் பேட்டி
அமைச்சர் பிடிஆருடன் நிகழ்ச்சியில் டீன் ரத்தினவேல்

இந்நிலையில், பாரம்பரிய உறுதிமொழிக்கு பதிலாக சமஸ்கிருத உறுதிமொழி எடுத்ததாக தகவல் தீ போல் பரவிய நிலையில், மருத்துவ கல்வி இயக்ககம் டீன் ரத்தினவேலுவை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.’சமஸ்கிருத உறுதிமொழி வாசித்தது எனக்கே தெரியாது’  – மதுரை மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல் பேட்டி

இந்நிலையில், இந்த நடவடிக்கை தொடர்பாக டீன் டாக்டர் ரத்தினவேலுவை தொடர்புகொண்டு பேசினோம். இது திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டதா ? இதற்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற நம்முடைய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் :

டீன் டாக்டர் ரத்தினவேல் : எப்போதும் மாணவர்கள் தான் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர்கள். அதன்படியே, இந்த நிகழ்வையும் மாணவர் செயலரே ஒருங்கிணைத்தார். அதன்படி, தேசிய மருத்துவ ஆணைய இணையதளத்தில் இருந்த அந்த ‘மகரிஷி சரக் சபத்’ என்ற வாக்கியம் அடங்கிய உறுதிமொழியை எடுத்து வாசித்திருக்கின்றனர்.

’சமஸ்கிருத உறுதிமொழி வாசித்தது எனக்கே தெரியாது’  – மதுரை மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல் பேட்டி
டீன் டாக்டர் ரத்தினவேல்

ஆனால், அதுவும் சமஸ்கிருதத்தில் வாசிக்கப்படவில்லை. ஆங்கிலத்திலேயே அந்த உறுதிமொழி வாசிக்கப்பட்டது. இங்க யாருக்கு சமஸ்கிருதம் படிக்கவோ, புரிந்துகொள்ளவோ தெரியும் ? அதோடு, அவர்கள் இந்த உறுதிமொழியை படித்த பிறகுதான் எனக்கே தெரியும். அதுவரை எனக்கு இதைதான் படிக்கப்போகிறார்கள் என்று கூட தெரியாது.

இது மாணவர்களால் எடுக்கப்பட்டது. எப்போதும் வாசிக்கப்படும் உறுதிமொழி என்பதாலேயே நான் உள்பட யாரும் அதில் என்ன மாற்றம் செய்துவிடப்போகிறார்கள் என்று கவனிக்காமல் இருந்துவிட்டோம்.  நான் ஒருபோதும் ஹிப்போகிராடிக் உறுதி மொழிக்கு பதிலாக, ‘மகரிஷி சரக் சபத்’ என்ற சமஸ்கிருத வாக்கியம் கொண்டு உறுதி மொழியை வாசிக்க வேண்டும் என்று சொல்லவில்லை ; அது பற்றி எனக்கு உண்மையிலேயே தெரியாது.

இது பற்றி என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல், சமஸ்கிருதத்திலேயே முற்றிலும் உறுதிமொழி வாசிக்கப்பட்டதாக நினைத்து என் மீது நடவடிக்கை எடுத்துவிட்டார்கள். யார், இதை எப்படி மருத்துவ அமைச்சருக்கும் மருத்துவ கல்வி இயக்கத்திற்கும் கொண்டு போய் சேர்த்தார்கள் என்பது தெரியவில்லை.

என்னிடம் வாய் வார்த்தையாக கூட எதுவும் கேட்காமல், எந்த விசாரணையும் செய்யமல், தவறான புரிதலின் அடிப்படையில் என் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். சனிக்கிழமை நிகழ்ச்சி நடைபெற்றது, ஞாயிற்றுக் கிழமை மதியம் என்மீதான நடவடிக்கை ஆர்டர் கொடுத்துட்டாங்க. முதல்வர் இதை கவனித்து, உண்மையை கண்டறிந்து என் மீதான நடவடிக்கையை திரும்ப பெறவேண்டும் என டீன் ரத்தினவேல் நம்மிடம் தெரிவித்தார்.’சமஸ்கிருத உறுதிமொழி வாசித்தது எனக்கே தெரியாது’  – மதுரை மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல் பேட்டி

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ரத்தினவேலை தனக்கு நன்றாக தெரியும் என்றும், கொரோனா காலத்தில் சிறப்பாக செயலாற்றியவர் அவர் என்றும், மாணவர்கள் செய்த செயலுக்கு, ரத்தினவேல் மீது நடவடிக்கை எடுத்திருப்பது சரியான நடவடிக்கை இல்லை என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் பரவும் தகவலை அப்படியே உண்மை என்று நம்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், டீன் விவகாரத்தில் கூட தீர விசாரணை செய்யாமல் சமஸ்கிருதத்தை எதிர்க்கிறோம் என்ற ஒரே கருத்தை மட்டும் பிடித்துக்கொண்டு அரசு செயல்பட்டிருப்பதாகவும் மருத்துவ கல்லூரி மாணவர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Embed widget