Railway: சிறப்பு ரயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - முழு விவரம் உள்ளே
சிறப்பு ரயில் வண்டி எண் 07696 என மாற்றம் செய்யப்பட்டு டிசம்பர் 30 வரை சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் - ஹைதராபாத், செகந்திராபாத் - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில்களின் வண்டி எண்கள் முறையே 07686, 07685 என இருந்தன. வெள்ளிக்கிழமைகளில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ராமேஸ்வரம் - ஹைதராபாத் வாராந்திர சிறப்பு ரயில் வண்டி எண் 07696 என மாற்றம் செய்யப்பட்டு டிசம்பர் 30 வரை சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. .
#Madurai 04.8.2022 Train numbers of Rameswaram weekly special train gets changed and Mettupalayam - Tirunelveli weekly special train will stop at Podanur also.#rameshwaram | @TN_Trainusers | @TrainUsers | #tamilnadu | #train | #railway | @Vanni_Radha | @Rameshtamil10 @abpnadu
— Arunchinna (@iamarunchinna) August 4, 2022
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ‘பருத்திவீரன் பிரியாமணியை பார்த்தது போல் உள்ளது’ - ஷங்கர் மகளை பாராட்டிய கார்த்தி
புதன்கிழமைகளில் செகந்திராபாத்தில் இருந்து புறப்படும் செகந்திராபாத் - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயிலின் வண்டி எண் 07695 என மாற்றம் செய்யப்பட்டு டிசம்பர் 28 வரை சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்புரயிலுக்கு மட்டும் போத்தனூர் ரயில்நிலையத்திற்கு நிறுத்தம் வழங்கப்பட்டிருந்தது. தற்பொழுது பயணிகளின் வசதிக்காக ஆகஸ்ட்5 முதல் மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி வாராந்திர ரயிலும் போத்தனூர் ரயில்நிலையத்தில் 2sec நின்று மீண்டும் இரவு புறப்படும்
— Arunchinna (@iamarunchinna) August 4, 2022
திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயிலுக்கு மட்டும் போத்தனூர் ரயில் நிலையத்திற்கு நிறுத்தம் வழங்கப்பட்டிருந்தது. தற்பொழுது பயணிகளின் வசதிக்காக ஆகஸ்ட் 5 முதல் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயிலும் போத்தனூர் ரயில் நிலையத்தில் இரண்டு நிமிடம் நின்று மீண்டும் இரவு 08.55 மணிக்கு புறப்படும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்