மேலும் அறிய
Advertisement
மதுரையில் திருமாவளவன் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு கத்தியுடன் வந்த நபருக்கு அடி உதை...!
’’திருமாவளவன் பங்கேற்றபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கத்தியுடன் அரங்கிற்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. அந்த நபரை மடக்கிப் பிடித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவரை சரமாரியாக தாக்கத் தொடங்கினர்’’
மதுரை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்ற நிகழ்ச்சியில் கத்தியுடன் புகுந்ததாக மர்ம நபரை வி.சி.கவினர் சரமாரி தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலை சிறுத்தை கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனின் பிறந்தநாள் விழா கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி பல்வேறு இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. "திராவிடச் சிறுத்தை சகோதரர் திருமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்" என தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். திருமாவளவனின் சமீபத்திய புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகின.
இந்நிலையில் மதுரைக்கு விமானம் மூலம் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான திருமாவளவன், கொடியேற்றும் நிகழ்ச்சி, இரங்கல் கூட்டம், பிறந்தநாள் விழா, கருத்தரங்கம் என மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
மதுரை-குமாரம் சாலையில் உள்ள சிக்கந்தர் சாவடியில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்றபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கத்தியுடன் அரங்கிற்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த நபரை மடக்கிப் பிடித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் அவரை சரமாரியாக தாக்கத் தொடங்கினர்.
மதுரை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
பின்னர் அந்த நபரை அலங்காநல்லூர் போலீசாரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஒப்படைத்தனர். கத்தியுடன் வந்த நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் சோழவந்தானைச் சேர்ந்த மாரீஸ்வரன் (28) என்பதும், அவர் மது போதையில் இருந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமாவளவன் கலந்து கொள்ள வந்த நிகழ்ச்சியில் கத்தியுடன் வந்த நபரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - 100 Days of MK Stalin: உலக அரங்கில் ஜொலிக்குமா கீழடி...தி.மு.க அரசின் செயல்பாடு !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
வணிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion