மேலும் அறிய
Advertisement
படிக்காமல் ஏன் பார்வேர்டு செய்தீர்கள்? ; எஸ்.வி.சேகரிடம் நீதிபதி கேட்ட சரமாரி கேள்விகள் !
பெண் செய்தியாளர்கள் அலுவலகத்தில் பணிபுரிவது குறித்து தரக்குறைவான கருத்தை பகிர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரிய வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தது மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
படிக்காமல் ஏன் பார்வேர்டு செய்தீர்கள்? அவ்வாறு பார்வேர்டு செய்துவிட்டு, மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா? - மதுரைக்கிளை எஸ்.வி.சேகருக்கு கேள்வி.
பெண் செய்தியாளர்கள் பணிபுரிவது குறித்து தரக்குறைவான கருத்தை நடிகரும், பி.ஜே.பி பிரமுகருமான எஸ்.வி.சேகர் கடந்த 2018-ஆம் ஆண்டு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் மனு அளித்திருந்தனர். அதனடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 3 பிரிவுகள் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்புச்சட்டத்தின் ஒரு பிரிவு என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதை சற்று கவனிக்கவும் *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
இந்நிலையில் தனக்கெதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி நிஷாபானு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.வி.சேகர் தரப்பில்," அந்த பதிவை படிக்காமல் பார்வேர்ட் செய்துவிட்டதாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும்" தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி," படிக்காமல் ஏன் பார்வேர்ட் செய்தீர்கள்? அவ்வாறு பார்வேர்ட் செய்துவிட்டு, மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா? என கேள்வி எழுப்பினார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
மனுதாரர் தரப்பில் வழக்கை ரத்து செய்யுமாறு கோரப்பட்டது. அதற்கு வழக்கை ரத்து செய்ய முடியாது என குறிப்பிட்ட நீதிபதி வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தஞ்சாவூர்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion