மேலும் அறிய
மதுரை: அரசுப் பேருந்தின் முன் பக்க டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு! பயணிகளுக்கு என்ன ஆச்சு?
டயர் கழன்று ஓடிய பேருந்தை சாமர்த்தியமாக இயக்கி விபத்து ஏற்படாமல் பயணிகளை பாதுகாத்த அரசு பேருந்து ஓட்டுநர் மகேஷ்-க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.,

டயர் கழன்று ஓடியது
உசிலம்பட்டி அருகே அரசுப் பேருந்தின் முன் பக்க டயர் கழன்று ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது - ஒட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து பேரையூர் நோக்கி சென்ற அரசு பேருந்து நல்லுத்தேவன்பட்டி கண்மாய் அருகில் சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்தின் முன் பக்க டயர் கழன்று ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,
மதுரை உசிலம்பட்டி அருகே அரசுப் பேருந்தின் முன் பக்க டயர் கழன்று ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது - ஒட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
— arunchinna (@arunreporter92) October 2, 2023
Further reports to follow - @abpnadu #madurai | @LPRABHAKARANPR3 @HemantSorenJMM @dumbassgenius @abplive pic.twitter.com/eskoVoWdx5
பேருந்தை இயக்கி வந்த ஓட்டுநர் மகேஷ் என்பவர், துரிதமாக செயல்பட்டு பேருந்தை கண்மாய்க்குள் சென்று விடாமல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது, நல்வாய்ப்பாக பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.,
மேலும் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற செய்திகள் குறித்து தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும் - ’காவிரி பிரச்சினையில் காங்கிரஸை பார்த்து நடுங்கும் திமுக’- சாட்டை துரைமுருகன் பேட்டி!

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் மற்றும் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை ஊழியர்கள் சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தில் கிடந்த டயரை மீட்டு பேருந்தை சரி செய்து எடுத்துச் சென்றனர்., டயர் கழன்று ஓடிய பேருந்தை சாமர்த்தியமாக இயக்கி விபத்து ஏற்படாமல் பயணிகளை பாதுகாத்த அரசு பேருந்து ஓட்டுநர் மகேஷ்-க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.,
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: பழிக்குப்பழி.. பெங்களூரில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர்.. பகீர் சி.சி.டி.வி.காட்சி..!
Check out below Health Tools-
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















