மேலும் அறிய

பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை எடுக்க திமுக அரசு தவறிவிட்டது - ஆர்.பி. உதயகுமார்

’மக்களுக்காக திட்டங்களே தவிர திட்டத்திற்கான மக்கள் என்பது கூடாது, ஆகவே முல்லை பெரியார் விவகாரத்தில் சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’

திருமங்கலம் தொகுதி கரடிக்கல் அனுப்பப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் வினோத்குமார் மற்றும் அன்பரசன் உள்ளிட்ட ஆறு பேர் திருவேடகம் அருகே உள்ள வைகை  ஆற்றில் குளிக்க சென்றனர். இதில் வினோத்குமார், அன்பரசன் ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதில் அன்பரசன் மட்டும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். காணாமல் போன வினோத்குமார் உடலை தேடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சிதுணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் தீயணைப்பு துறைகளால் வைகை ஆற்றில் தேடப்பட்டு வரும் இடத்தினை நேரில் வந்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து தீயணைப்பு துறை அதிகாரி இடமும், வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் நிலைமையை கேட்டறிந்தார். தொடர்ந்து ராணுவ வீரர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய சட்டமன்ற எதிர்க்கட்சிதுணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார், செய்தியாளர்களிடம் பேசியதாவது:


பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை எடுக்க திமுக அரசு தவறிவிட்டது - ஆர்.பி. உதயகுமார்

 


மதுரை, தேனி ஆகிய பகுதிகளுக்கு தென்மேற்கு பருவமழை காரணமாக முல்லைப் பெரியாறு இருந்து தண்ணீர் மற்றும் மழை நீர் வருகிறது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தீர்ப்பினை பெற்று தந்தார்கள். தற்போது ரூல்கர்வ் கடைபிடித்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது தான் முல்லைப் பெரியாறு குறித்து முதலமைச்சர் நீண்டநாள் கழித்து விளக்கம் அளித்து உள்ளார். 5 மாவட்ட விவசாயிகளின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் என்று எடப்பாடியார் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மக்களுக்காக திட்டங்களே தவிர திட்டத்திற்கான மக்கள் என்பது கூடாது, ஆகவே முல்லை பெரியார் விவகாரத்தில் சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்


தற்போது வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற ஆறு பேரில் இருவர் தண்ணீரில் சிக்கி ஒருவர் உயிரிழந்து உள்ளார். மற்றொருவரை தேடி வருகின்றனர். இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். ராணுவப் பணியை முடித்துக் கொண்டு விடுப்பில் தன் வீட்டுக்கு கூட செல்லாமல் நண்பருடன் சேர்ந்து ஆற்றில் குளித்த போது அடித்துச் செல்லப்பட்டது வேதனை கவலை அளிக்கிறது. நாட்டை காக்கும் ராணுவ வீரர் எப்படியாவது உயிரோடு இருக்க வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறோம். இது போன்ற மழைக் காலங்களில் ஆற்றில் குளிக்க கூடாது. ஆடு மாடுகளை குளிப்பாட்ட கூடாது. துணிமணிகள் துவைக்கக் கூடாது. இதைத் தான் கடந்த ஆட்சிக்கு ஏற்பட்ட அனுபவத்தை அரசுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

 


பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை எடுக்க திமுக அரசு தவறிவிட்டது - ஆர்.பி. உதயகுமார்

பொதுவாக தென்மேற்கு பருவமழை என்பது அண்டை மாநிலங்களில் இருந்து நமக்கு வரும். ஆனால், வட கிழக்கு பருவமழை என்பது முழுக்க முழுக்க தமிழகத்துக்கு மட்டுமே வரும். இதில் பெய்யும் 49 சதவீதம் மழை குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பயன்படும். ஏற்கனவே சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார், மழைக்காலங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் காவிரி ஆற்றை முழுமையாக கண்காணிக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தினார். பேரிடர் காலங்களை மூன்று நிலையாக கடந்த ஆட்சி காலத்தில்  கடைபிடிக்கப்பட்டது, குறிப்பாக வெள்ளம் வருவதற்கு முன்பாக போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும், அதை எடுக்க திமுக அரசு தவறியதால் தான், இன்றைக்கு மேட்டூரில் 2 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. அதே போன்ற சூழ்நிலை வைகை அணையில் உள்ளது. இந்த திமுக அரசு பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை  நடவடிக்கை எடுக்க தவறி விட்டது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற உயிர்ப்பலி ஏற்பட்டிருக்காது.

 


பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை எடுக்க திமுக அரசு தவறிவிட்டது - ஆர்.பி. உதயகுமார்

மதுரையில் சில நாட்களுக்கு முன்பாக கனமழையால் நான்கு பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இதுவரை அவர்களுக்கு எந்த நிவாரண உதவியும் கொடுக்கவில்லை. இது போன்ற காலங்களில் அம்மாவின் ஆட்சியில் எடப்பாடியார் 10 லட்சம் வரை  உயிரிழந்த குடும்பங்களுக்கு கொடுத்தார். அதேபோல் மீனவர்களுக்கு 20 லட்சம் வரை கொடுத்தார், மேலும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணங்கள், காப்பீட்டு தொகைகள், இடுபொருள்கள் போன்றவற்றை உடனுக்குடன் வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடியார் தற்போது பழனி, காங்கேயம், தர்மபுரி போன்ற  மாவட்டங்களுக்கு செல்கிறார். போகும் வழியெல்லாம் மக்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். எந்தவித அறிவிப்பும் இல்லாமல் எடப்பாடியார் வரும்பொழுது தொண்டர்கள்  திரண்டு வருகிறார்கள். ஆனால் சிலர் தென் மாவட்டத்திற்கு வருகை தரும் போது அறிவிப்பு தருகின்றனர். இருப்பினும் எதிர்பார்த்த கூட்டம் இல்லாததால் அவர்களுக்கு தோல்வி அடைந்துள்ளது. ஆகவே இன்றைக்கு கட்சியும், கழகத் தொண்டர்களும் எடப்பாடியார் பக்கம் தான் உள்ளார்கள் என்று கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

6.75 லட்சம் விருதுநகர் குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்: தமிழக அரசின் அசத்தல் திட்டம்!
6.75 லட்சம் விருதுநகர் குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்: தமிழக அரசின் அசத்தல் திட்டம்!
பிராய்லர் கோழிகளை பண்ணைகளில் இருந்து அனுப்புவதற்கு முன் தீவன நிறுத்தம் செய்யக் கோரி வழக்கு !
பிராய்லர் கோழிகளை பண்ணைகளில் இருந்து அனுப்புவதற்கு முன் தீவன நிறுத்தம் செய்யக் கோரி வழக்கு !
மதுரையில் நாளை (1.08.2026) மின்தடை: உங்கள் பகுதிக்கு பாதிப்பா?
மதுரையில் நாளை (1.08.2026) மின்தடை: உங்கள் பகுதிக்கு பாதிப்பா?
தாமிரபரணி ஆறு மாசுபடுத்துபவர்களுக்கு அபராதம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தாமிரபரணி ஆறு மாசுபடுத்துபவர்களுக்கு அபராதம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget