மேலும் அறிய

சுப.உதயகுமாருக்கு 3 ஆண்டுகள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

மனுதாரருக்கு 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாருக்கு 3 ஆண்டுகள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
நாகர்கோவிலை சேர்ந்த கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு..,”கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக தன் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கிட்டத்தட்ட 245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 213 வழக்குகள் திரும்ப பெறப்பட்டது. இந்த வழக்குகளால் எனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. இதனால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெற பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் வழக்குகள் திரும்ப பெறப்படவில்லை. 
 
எனக்கு பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த நிலையில் கடந்த ஆண்டு ஒரு வருடத்திற்கு பயன்படுத்தும் வகையில்  தற்காலிக பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. ஒரு வருட பாஸ்போர்ட் வழங்கினால் விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். எனவே வெளிநாடு செல்வதற்கு விசா கிடைக்கும் வகையில் பத்தாண்டு காலத்திற்கு செல்லும்படியாகும் பாஸ்போர்ட் வழங்கக்கோரி விண்ணப்பம் செய்திருந்தேன். இந்நிலையில் என் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதை காரணமாக கூறுவதோடு, பயங்கரவாத செயல்களில் தொடர்பு இருப்பதாக கூறி பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகள் மறுக்கின்றனர்.  எனக்கு சாதாரண குடிமகனுக்கு உள்ள அடிப்படை உரிமையில் ஒன்றான பாஸ்போர்ட்டை முடக்குவது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகும். எனவே எனக்கு  பாஸ்போர்ட் வழங்க பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

சுப.உதயகுமாருக்கு 3 ஆண்டுகள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வழங்க நீதிமன்றம் உத்தரவு!
 
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராடியதற்காக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல வழக்குகள் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும், இதனை கருத்தில் கொண்டு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி,  மனுதாரர் ஒரு சமூக ஆர்வலர், அணு உலைக்கு எதிராக போராடுபவர். எனவே மனுதாரருக்கு 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
 
தலைப்பு செய்திகள்

த.வெ.க., எங்களை சாப்டாக அணுகினால் நாங்களும் சாப்டாக  அணுகுவோம்: - தமிழிசை பேட்டி !
த.வெ.க., எங்களை சாப்டாக அணுகினால் நாங்களும் சாப்டாக  அணுகுவோம்: - தமிழிசை பேட்டி !
பள்ளிகளில் புகையிலை ஒழிப்பு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
பள்ளிகளில் புகையிலை ஒழிப்பு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Karunanidhi: ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டாரா கருணாநிதி.? உண்மையான காரணம் என்ன.? பிளாஷ் பேக் இதோ..
ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டாரா கருணாநிதி.? உண்மையான காரணம் என்ன.? பிளாஷ் பேக் இதோ..
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
TATA Cars Price Hike: இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
Embed widget