மேலும் அறிய

மதுரை ஆவின் பாலில் பிளாஸ்டிக் நெடி... அதிர்ச்சி புகார், விசாரணை தீவிரம் !

மதுரை மாநகர் சாத்தமங்கலம் பகுதியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து நாள்தோறும் 1.9 லட்சம் லிட்டருக்கு மேல் பால் விநியோகம் செய்யப்படுகிறது. 

மதுரை மாவட்ட முழுவதும் ஆவின் நீல நிற பால் பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக் நெடி வீசுவதாக வாடிக்கையாளர்கள் புகார் - ஆவின் பால்பண்ணை மற்றும் ஆவின் டெப்போக்களில் உள்ள பால் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்து அனுப்பிய உணவு பாதுகாப்புத்துறையினர்.

பால்பாக்கெட்டுகளில் ப்ளாஸ்டிக் மற்றும் குளோரின் போன்ற நெடி
 
மதுரை புறநகர் பகுதியான உசிலம்பட்டி, கள்ளிக்குடி, வாடிப்பட்டி, கொட்டாம்பட்டி, சிலைமான், வலையங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் மாநகர பகுதிகளிலும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவின் பால் பூத்களுக்கு பால்பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் மதுரை மாவட்ட முழுவதும் ஆவின் டெப்போக்களில் விற்பனை செய்யப்படும் நீலநிற பால்பாக்கெட்டுகளில் ப்ளாஸ்டிக் மற்றும் குளோரின் போன்ற நெடி வீசுவதாக கூறி மாடக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் உணவுப்பாதுகாப்புத்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர். இதையடுத்து உணவுப்பாதுகாப்புத்துறையினர் மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆவின் டெப்போக்களில் இருந்து நீலநிற பால்பாக்கெட்டுகளில் உள்ள பால் மாதிரிகளை சேகரித்தனர் மேலும் சாத்தமங்கலம் ஆவின் பால்பண்ணையில் இருந்தும் பால் மாதிரிகளை எடுத்துசென்று ஆய்வகத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர். குழந்தைகள், நோயாளிகள் என பல்வேறு தரப்பினருக்கும் பிரதானமாக பயன்படுத்தபடும் ஆவின் பால்பாக்கெட்டுகளில் மதுரை மாவட்ட முழுவதும் ப்ளாஸ்டிக் மற்றும் குளோரின் நெடி வருவதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆவின் நீலநிற பால்பாக்கெட்
 
இது குறித்து மதுரை ஆவின் நிர்வாகம் தரப்பில் அளித்த விளக்கத்தில்...," ஆவின் நீலநிற பால்பாக்கெட் தொடர்பாக புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. நீலநிற பால்பாக்கெட்டுகள் பிளாஸ்டிக் பேப்பர் ரோலில் ஏற்பட்ட குறைபாடுகளால் நெடி வீசியது தெரியவந்து தற்போது புதிய பால்பாக்கெட்டுகள் மாற்றப்பட்டுள்ளதாகவும், பால்பாக்கெட்டுகளை தரமின்றி அளித்த நிறுவனத்தின் மீது அபராதம் விதிப்போ, நடவடிக்கையோ என்பது முழுமையான விசாரணைக்கு பின்னர் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்த முடிவு அறிவிக்கப்படும் என்றனர். ஆவின் நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டாலும் தொடர்ச்சியாக தரக்கட்டுப்பாடு அலுவலர் மூலமாக பரிசோதித்த பின்னரே விநியோகம் செய்யப்படும் நிலையில் எப்படி பால்பாக்கெட்டுகள் நெடியுடன் 3 நாட்களாக விநியோகிக்கப்பட்டது என்பது குறித்தான முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரின் வேளாண் பாரம்பரியம்... மண்ணையும், உணவையும், உடல்நலத்தையும் காக்கும் இயற்கை விவசாயம்!
தஞ்சாவூரின் வேளாண் பாரம்பரியம்... மண்ணையும், உணவையும், உடல்நலத்தையும் காக்கும் இயற்கை விவசாயம்!
சிவகங்கையில்
சிவகங்கையில் "செம்மண்" விதை திருவிழா: பாரம்பரிய வேளாண்மைக்கு புத்துயிர்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
Rain Alert : சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை – உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை - உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
Embed widget